Browsing tag

விசாரணை

தங்கக்கடத்தல் வழக்கில், நடிகை ரன்யாராவ் ஒப்புதல்: கோர்ட் தீர்ப்பு என்ன?

தங்கக்கடத்தலுக்கு ஹவாலா பணம் பயன்படுத்தியதாக ரன்யாராவ் ஒப்புதல் அளித்துள்ளார். இது பற்றிய தகவல்கள்.. துபாயிலிருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், தங்கம் வாங்க ஹவாலா மூலம் பணம் அனுப்பியதை ஒப்புக்கொண்டதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நடிகை ரன்யா ராவ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில், நகரத்தின் 64-வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் […]

நடிகையின் கை-கால்களை கட்டிப்போட்டு, நகை-பணம் கொள்ளை: திரையுலகில் பரபரப்பு

நடிகை ஒருவரிடம் கொள்ளையடித்த சம்பவம் பற்றிய தகவல்கள்.. கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள, பாலிவுட் நடிகை ஒருவர் ஹைதராபாத்துக்கு வந்துள்ளார். பஞ்சாரா ஹில்ஸ் அருகே உள்ள வசாப் டேங்கில் இருக்கும் ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது, அவரை தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத 4 பேர் அவரிடம் இருந்த பொருட்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகையின் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த புகாரில் நடிகை […]

சர்வதேச கடத்தல் கும்பலுடன் நடிகை ரன்யாராவ் தொடர்பு

திருமணமான ஒரே மாதத்தில் ரன்யாராவை விட்டு பிரிந்துவிட்டதாக கணவர் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையம் வந்த நிலையில் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, ரூ.2.67 கோடி ரொக்கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரன்யா ராவை விசாரித்தபோது, அவர் சர்வதேச தங்கக் கடத்தல் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர். இந்த வழக்கில் தான் […]

பொய்யான குற்றச்சாட்டு, நான் தங்கம் கடத்தவில்லை: நடிகை ரன்யா ராவ் திடீர் பல்டி

வாழ்க்கையில் ரீல் நடிப்பும் உண்டு, ரியல் நடிப்பும் உண்டு. இவைகளை கண்டு தெளிவது நன்று. இனி, விஷயத்திற்கு வருவோம்.. ‘தங்கம் கடத்தல் வழக்கில் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வேறு யாரையோ பாதுகாக்க என்னை குற்றவாளியாக கருதுகிறார்கள்’ என்று நடிகை ரன்யா ராவ் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் கடத்திய வழக்கில் டிஆர்ஐ அதிகாரிகளால், நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள […]

இயக்குனர் ஷங்கர் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறைக்கு, நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் ஷங்கர் சொத்துகள் மீதான நடவடிக்கையில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்.. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் வந்த எந்திரன் படம் தனது கதையான ஜூகிபாவை திருடி எந்திரன் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார். ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை […]

கிரிப்டோ கரன்ஸி மோசடி கும்பல் செய்தி குறித்து, நடிகை தமன்னா

‘தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என தமன்னா குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் மூலம், அதிக லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். இவர்களில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அசோகன், போலீசில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை விசாரிக்க புதுச்சேரி காவல்துறை முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து தமன்னா தெரிவிக்கையில், […]

ரயில் விபத்தில் நேர்ந்த அடுத்தடுத்து உயிரிப்பு: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்..

பொதுமக்கள் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில், மகாராஷ்டிர மாநிலம் பட்னேரா ரயில் நிலையம் அருகே வந்த போது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் தீப்பொறி பறந்தது. இதை கவனித்த பயணி ஒருவர், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. சில […]

ஆவணப்பட விவகாரம்: நயன்தாரா அணிந்த ஆடைகளுக்கும் காப்புரிமை வேண்டும்: தனுஷ் தரப்பு அதிரடி வாதம்..

தனுஷ்-நயன்தாரா இடையே நடைபெற்று வரும் ‘ஆவணப்பட விவகாரம்’ குறித்த விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக எழுந்த காரசார விவாதங்கள் பார்ப்போம்.. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், ‘கடந்த 2015-ம் ஆண்டு ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரம் மற்றும் ஆடைகள் மீதும் காப்புரிமை பெற்றுள்ளது என்றும், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நயன்தாரா, நெட்ஃபிக்ஸ் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “28 வினாடிகள்” காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் […]

‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் தில் ராஜுவை தொடர்ந்து, ‘புஷ்பா’ இயக்குனர் சுகுமார் வீட்டிலும் ரெய்டு…

பான் இந்திய படமாக வெளிவந்த புஷ்பா வசூலை வாரிக் குவித்துள்ளது. இச்சூழலில், இன்று இப்பட இயக்குனர் சுகுமாரின் வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளது. இது பற்றிய தகவல்கள் வருமாறு: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தன்னா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 படம், தற்போது வரை இந்தியாவில் மட்டும் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் சுகுமாரின் ஹைதராபாத் வீட்டில் இன்று அதிகாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்பொழுது […]

நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபர்; 24 மணிநேரத்தில் கைது; விசாரணை விவரம்..

பாலிவுட் முன்னணி நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபரை, மும்பை போலீஸார் துரித நடவடிக்கையில் விரைந்து கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு: சயிப் அலிகான், நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர், மும்பையில் பந்த்ராவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். ஜனவரி 16-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சயிப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் மிகப்பெரிய […]