Browsing tag

நீதிமன்றம்

நடிகை லட்சுமி மேனனை கைது செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு..

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில், லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் […]

ரவிமோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல்: நீதிமன்றம் அனுமதி..

ரூ.6 கோடி விவகாரம் தொடர்பாக, நடிகர் ரவிமோகன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் விவரம் காண்போம்.. படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ. 6 கோடியை திருப்பி செலுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கும் வகையில், மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் என்ற படத் […]

‘கூலி’ படம் தொடர்பாக, 36 இணைய தளங்களுக்கு கோர்ட் உத்தரவு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இதனை முன்னிட்டு தியேட்டர்கள் இப்போதே கோலாகலமாய் காட்சியளிக்கிறது. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன் அமீர்கான் என பலர் இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை, சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி, காப்பிரைட் சட்டத்தின் கீழ், சன் பிக்சர்ஸின் அங்கமான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

சொத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: ரவிமோகனுக்கு கோர்ட் உத்தரவு

ரவி மோகன் நடிப்பில் தற்போது பராசக்தி, கராத்தே பாபு, ஜீனி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதனிடையே, கோவையை சேர்ந்த பாபி டச் கோல்டு யூனிவர்சல் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க, ரவிமோகனை ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக, 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரவி மோகன். தான் கால்ஷீட் ஒதுக்கியபோதும் படப்பிடிப்பை தொடங்காததால், தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. தான் கொடுத்த […]

‘பேர்ட் கேர்ள்’ டீசரை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘பேர்ட் கேர்ள்’ டீசர் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பார்ப்போம்.. மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 26.1.2025-ல் யூடியூப், இணையத்தில் ‘பேட் கேர்ள்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் பதின்ம வயதினர் பற்றி தவறாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன்லைனில் உள்ளது. இது போன்ற காட்சிகள் குழந்தைகள் ஆபாசம், குழந்தை பாலியல் […]

ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: கோர்ட்டில் ரவிமோகன் வழக்கு..

கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம், இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில், ஒப்பந்தப்படி படப்பிடிப்பை துவங்காததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒப்பந்தப்படி, 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய போதும், இதுவரை படப்பிடிப்பை துவங்காததால் தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனதாகக் […]

நடிகை வனிதா நடித்துள்ள திரைப்படம் மீது, இளையராஜா வழக்கு..

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக இளையராஜா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிசஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நான் இசையமைத்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி தூக்கமேது..’ பாடல் இடம்பெற்றுள்ளது. […]

அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: நடிகர் சங்கம் எச்சரிக்கை..

நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில், எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதுமின்றியும், பல தவறான பொய்யான […]

வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்துவுக்கு அபராதம்

திரையில் சிரிக்க வைத்தவர்கள் இவர்கள்; தற்போது சிந்திக்கவும் வைத்துள்ளார்கள். அதாவது, சிங்கமுத்துவுக்கு எதிராக, வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், ‘சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட […]

ஆர்த்தி குறித்து ரவிமோகன் பெருமிதம்: வைரலாகும் நிகழ்வு

ரவி மோகனும் ஆர்த்தியும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவிருக்கிறார்கள். இச்சூழலில் ஆர்த்தி குறித்து ரவிமோகன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. ரவிக்கும், ஆர்த்திக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு மகன்களில் ஆரவ் என்பவர் ரவியுடன் சேர்ந்து ‘டிக் டிக் டிக்’ படத்த்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு தனது தோழி கெனிஷாவுடன் வருகை தந்திருந்தார். அதனைப் பார்த்த ஆர்த்தி, எமோஷனலாக அறிக்கையை வெளியிட்டிருந்தார். பிறகு, ரவியும் ஒரு அறிக்கை விட்டார். ரவி ஏற்கனவே […]