Browsing tag

சுதா கொங்கரா

ஓடிடி.யில் ‘பராசக்தி’ படம் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி திரையரங்குகளில் வெளியான ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்றது. 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு சுமார் 30 கட்கள் சென்சார் தரப்பில் அளிக்கப்பட்டது. சென்சார் சொன்ன மாற்றங்களை செய்து படத்தை வெளியிட்டது படக்குழு. படத்தின் ஓடிடி ரிலீஸிலும் சென்சார் வெர்ஷன் வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய ஜீ 5 நிறுவனம், படத்தின் அன்சென்சார்டு வெர்ஷனை வெளியிட்டு உள்ளது. […]

‘பராசக்தி’ பட டிரெய்லரில் பேரறிஞர் அண்ணா கதாபாத்திரம், வைரல்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள ‘பராசக்தி’ வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. இச்சூழலில் நேற்று வெளியான டிரெய்லர் உணர்த்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக அமையும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. அவ்வகையில், வெளியான படத்தின் டிரெய்லரும் அதனை உறுதி செய்துள்ளது. 1960 காலக்கட்டங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்ட வரலாறுகளை தனது கற்பனையுடன் கலந்து ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா […]

யாரும் சுயமரியாதையை மட்டும் இழக்கவேண்டாம்: ரவிமோகன் பேச்சு..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ‘பராசக்தி’ படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற10-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2-வது […]

‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் பற்றி, ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை […]

‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா எங்கே தெரியுமா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசைவெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்பட 75 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவிமோகன் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு […]

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் விற்பனையில் சிக்கல்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படம் ஜனவரி 14-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் மற்ற உரிமைகள் நல்ல தொகைக்கு விற்பனையானாலும் இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை மட்டும் இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக இப்படத்தில் ஹிந்தி திணிப்பு பற்றிய கதைக்களம்தான் என சொல்லப்படுகிறது. ஹிந்தி திணிப்பு பற்றிய உண்மை சம்பவங்களை பேசும் படம் என்பது அனைவரும் அறிந்ததே. ஹிந்தி திணிப்பிற்கு எதிராக […]

எஸ்கே நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சுதா ​கொங்​கரா இயக்கத்​தில் சிவகார்த்தி​கேயன் நடித்​துள்ள ‘பராசக்​தி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்​கிறது. இதையடுத்து அவர் வெங்​கட் பிரபு இயக்கும் படத்​தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் வித்​தி​யாச​மான தோற்​றத்​தில் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்படுகிறது. இதற்​காக வெங்கட்-எஸ்கே இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு அவருக்கு டீ-ஏஜிங் தோற்​றத்தை வடிவமைக்கின்​றனர். வெங்​கட் பிரபு இயக்​கத்​தில் விஜய் நடித்த ‘கோட்’ படத்​தி​லும் விஜய்​யின் டீ-ஏஜிங் லுக்கை அமெரிக்காவில் தான் வடிவ​மைத்​தனர். அதே இடத்​துக்​கு, சிவ​கார்த்திகேயனின் தோற்​றத்தை ஸ்கேன் செய்ய இப்போது […]

சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு இருவரும் அமெரிக்கா பயணம்; காரணம்?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன. ‘பராசக்தி’ படத்துக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் எஸ்கே. இதில் எந்தப் படம் முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது வெங்கட்பிரபு படத்துக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அமெரிக்காவில் உள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். உடல் […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு இயக்கும் படங்களின் அப்டேட்ஸ்..

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து எஸ்கே நடிக்கவுள்ள படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனைத்தொடர்ந்து எஸ்கே 24-வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகளை கவனித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், அதில் சில சிக்கல்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது SK24 திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு திடீரென […]

‘மதராஸி’ படத்தில் அனிருத் இசை எப்படி?: சிவகார்த்திகேயன் கருத்து..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் வருகிற்5-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிமித்தமாக பல்வேறு நகரங்களுக்கு படக்குழு பயணித்து வருகிறது. சிவகார்த்திகேயனும் பங்கேற்றுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘இயக்குநர் முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல முன்னணி நடிகர்களை இயக்கியவர். அவருடன் இணைந்து பணியாற்றியதில் சந்தோஷம். அதனால் அவருக்கு இந்நேரத்தில் […]