Browsing tag

இந்திய ராணுவம்

போர் நிறுத்தம் பற்றி சல்மான்கான் பதிவு: நெட்டிசன்ஸ் சரமாரி கேள்வி..

ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு மீண்டும் போர் தொடுத்துள்ளது. இதற்கிடையே சல்மான்கான் பதிவு செய்து நீக்கிய தகவல் காண்போம்.. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து சல்மான்கான் டுவிட் செய்து பின்னர் நீக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நேரத்தில் அவர் மௌனம் சாதித்தது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போர் நிறுத்தம் குறித்த அவரது பதிவு வைரலாகி, பலவிதமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன், சல்மான்கான் தனது மகிழ்ச்சியை வலைதளத்தில் பதிவிட்டார். […]

இந்திய இராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பதிலடி: ரஜினி, இளையராஜா பாராட்டு..

மே மாதம் 7-ந்தேதி நள்ளிரவு இந்திய ராணுவம், தீவிரவாதிகள் தங்கியுள்ள பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தனது பதிலடிக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கும் நாடே பாராட்டுகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து மாநிலங்களவை உறுப்பினர், இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்திய ராணுவத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். […]

இந்திய இராணுவத்திற்கு, ஒரு ராயல் சல்யூட்: தவெக லீடர் விஜய்..

மே 7-ந்தேதி அதிகாலை, இந்திய விமானப்படை, பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. ஏப்ரல் 22-ந்தேதி காஷ்மீரில் உள்ள பபல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிட்டுள்ளார். ராணுவத்தின் இந்த நடவடிக்கையை நாடே கொண்டாடுகிறது. பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து துல்லியமாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. […]