Browsing tag

ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தி பெட்’ படம், ஊட்டியில் படப்பிடிப்பு..

பான் இந்திய அளவில் படங்களின் வரிசையில், சிறுபட்ஜெட் படங்கள் சில நேரங்களில் வெற்றி பெற்று விடுகின்றன. இதற்கு அடிப்படை காரணமாக வித்தியாசமான கதைக்களம். நடிகர்கள் தேர்வு ஆகியவை என கணிக்கப்படுகிறது. அவ்வகையில், வெத்து வேட்டு’, ‘பரிவர்த்தனை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.மணிபாரதி அடுத்து இயக்கியுள்ள படம், ‘தி பெட்’. இதில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநிதி புரொடக் ஷன்ஸ் […]

காலை முதல் இரவு வரை நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை..

ஸ்ரீகாந்த்-ஷாம் ஆகியோர் இணைந்து நடித்த ‘தி டிரெய்னர்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், […]

நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..

ஸ்ரீகாந்த், ஷாம்  நடித்துள்ள த்ரில்லர் படம், ‘தி டிரெய்னர்’. இப்படத்தில் ஜூனியர் எம். ஜி. ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே. ஆர்.எம்.ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் பற்றி இயக்குநர் பி.வேல்மாணிக்கம் தெரிவிக்கையில், ‘பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு போலீஸார் உருவாக்கிய ‘காவலன்’ செயலியில் இருந்து உத்வேகம் பெற்று சமூகத்துக்குத் தேவையான படமாக இது உருவாகியுள்ளது. ஸ்ரீ காந்த், நாய் […]

போதை பொருள் விவகாரம்.. ஒரே வார்த்தையில் பதில் சொல்ல அருண் விஜய்..!

போதைப்பொருள் விவகாரம் குறித்து ஒரே வார்த்தையில் பதில் சொல்லியுள்ளார் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவரைத் தொடர்ந்து கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு இருந்து வருகிறது இந்த நிலையில் அருண் விஜய் இடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் […]

தவறு செய்து விட்டேன்: நடிகர் ஸ்ரீகாந்த் வேதனை- போலீசார் விசாரணை விவரம்

தமிழ்த்திரையில் சசி இயக்கத்தில் உருவான ‘ரோஜா கூட்டம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளாக அவருக்கான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், தற்போது, போதைப்பொருள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன். வெளிநாடு எதற்கும் செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்’ என கூறியுள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த் தனது ஜாமீன் மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்தை, எழும்பூர் பெருநகர குற்றவியல் 14-வது நீதிமன்ற நடுவர் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, […]

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது: திரையுலகில் பரபரப்பு

தமிழ் சினிமாவில் ‘ரோஜா கூட்டம்’ படம் மூலமாக ஸ்ரீகாந்த் அறிமுகமாகி தொடர்ந்தார். தற்போது சினிமா பிஸியில் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீ காந்த் மீது போதைப்பொருள் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அவர் 40 முறை போதைப் பொருள் வாங்கியது தெரிய வந்ததை அடுத்து, ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் குமார் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை போலீசார் […]