Browsing tag

இளையராஜா

அஜித் படமாக இருந்தால் என்ன; எங்கள் சொத்தை எப்படி நீ திருடலாம்?: கங்கை அமரன் ஆவேசம்

‘என் வீட்டுக்குள் அனுமதி இல்லாமல் எப்படி நீ வரலாம்’ என்ற கங்கை அமரனின் ஆவேசப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ‘காப்பி ரைட்ஸ்’ தொடர்பாக அவர் பேசியதாவது: ‘இசை மற்றும் பாடல்கள் குறித்த காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் உலக அளவில் என்ன விதி இருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய விதியை நாங்கள் பின்பற்றவில்லை. கதை ஆசிரியருக்கு கதையில் உரிமை உண்டு, அந்தப் படம் எத்தனை மொழிகளில் வெளிவந்தாலும், அவர்களுக்கு அதில் உரிமை உண்டு. ஆனால், […]

சிம்பொனி படைத்த இளையராஜாவுக்கு, இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் ஆர்கானிக் தொகுப்பு

சிம்பொனி இசைத் தொகுப்பை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு, இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தனது ஆர்கானிக் தொகுப்பை வழங்கினார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் முரளி நடித்த ‘காமராசு’ என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நாஞ்சில் பி.சி. அன்பழகன். இதனைத் தொடர்ந்து அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற திரைப்படங்களையும் இயக்கி கவனம் ஈர்த்தார். மேலும், அரசியல் களத்தில் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளராகவும் தொடர்ந்து பயணித்து வருகின்றார். குமரி மாவட்டம், நாஞ்சில் […]

சிம்பொனி இசை என்றால் என்ன?: இளையராஜா விளக்கம்

சிம்பொனி பற்றி இளையராஜா தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்.. லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரமும் சிம்பொனி அமைத்துள்ளதாக சில நாட்களுக்கு முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா தெரிவித்திருந்தார். அதில், ‘லிடியன் என்னுடைய சிஷ்யன். அவர் சிம்பொனி அமைத்துள்ளதாக என்னிடம் கொண்டு வந்து போட்டுக் காட்டினார். கொஞ்ச நேரம் கேட்ட நான் அதனை நிறுத்தச் சொல்லிவிட்டு, இது சிம்பொனி இல்லை, சினிமாவின் […]

13 தேசங்களில் சிம்பொனி நடைபெற இருக்கிறது: சென்னை திரும்பிய இளையராஜா

லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பிய இளையராஜாவின் இசைமொழி காண்போம்.. இசைஞானி இளையராஜா, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் தனது சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பினார். இளையராஜா கம்போஸ் செய்த சுமார் 45 நிமிட சிம்பொனி இசையை கேட்ட ரசிகர்கள் மகிழ்ந்தனர். ஆசியாவிலேயே சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் இளையராஜா. சிம்பொனியை அரங்கேற்றி முடித்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் இளையராஜா. அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]

இந்தியாவிற்கே பெருமை சாமி: இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..

இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றத்திற்கு, ரஜினிகாந்த் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். இளையராஜா ‘வேலியன்ட்’ என்கிற பெயரில் சிம்பொனி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெறவிருக்கும் இளையராஜாதான்; இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி ஒன்றை அரங்கேற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிம்பொனி இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பொனி லண்டனின் Royal Philharmonic Orchestra மூலம் இசைக்கப்பட்டு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. இந்தப் பதிவு, இன்று மார்ச் […]

சிம்பொனி இசை என்றால் என்ன?

இளையராஜா ‘வேலியன்ட்’ என்ற பெயரில் ‘சிம்பொனி’ இசைத் தொகுப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இவ்வகையில், மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெற இருக்கிறார். இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி இசைத் தொகுப்பை இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் அரங்கேற்றுகிறார். இந்நிலையில், சிம்பொனி இசை பற்றிய தகவல்கள் அறிவோம். * சிம்பொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு. * இந்த இசைத்தொகுப்பு, பல பகுதிகளை, […]

பவதாரனியுடம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வெங்கட் பிரபு உருக்கம்..!

பவதாரணி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார் வெங்கட் பிரபு. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு இவரின் தங்கையும் இளையராஜாவின் மகளும் ஆன பவதாரணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தார். பவதாரணி அனேகன், இரும்பு குதிரை, பிரியாணி, பிதாமகன் ,மங்காத்தா, ஃபிரண்ட்ஸ் போன்ற பல படங்களுக்கு ஹிட் பாடல்கள் பாடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் […]

இளையராஜாதான் பலரை குடிகாரனாக மாற்றியது: இயக்குனர் மிஷ்கின் ருசிகர பேச்சு

‘இசைஞானி’ இளையராஜா பலரை குடிகாரனாக மாற்றினாரா? இதோ.. மிஷ்கின் பேசிய விஷயத்திற்குள் போவோம்.. இயக்கத்திலும் நடிப்பிலும் தனது தனித்துவத்தை தவறாமல் காண்பித்து வருகிறார் மிஷ்கின். தற்போது, இவர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், தினகரன் இயக்கத்தில் சோமசுந்தரம் நடித்திருக்கும் ‘பாட்டில் ராதா’ திரைப்பட விழாவில் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய மிஷ்கின், ‘நான் மிகப்பெரிய குடிகாரன். மதுவை ரசித்து, ருசித்து […]

நீங்கள் இயக்கியதில் அதிக உழைப்பை எடுத்துக்கொண்ட படம் எது?: வெற்றிமாறன் பதில்..

நாளை 20-ந்தேதி விடுதலை-2 ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ள திரையனுபவம் வருமாறு: திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாவது பாகம் உருவாகி நாளை வெள்ளிக்கிழமை 20-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் […]

விடுதலை 2 : சூரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

விடுதலை 2 படத்தில் நடித்த சூரி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்து வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, விஜய் சேதுபதி,மஞ்சு வாரியார், கென் கருணாஸ், கௌதம் மேனன், ராஜீவ் […]