3 வருடங்கள் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன்: இயக்குநர் பாண்டிராஜ் உருக்கம்..
கடைக்குட்டி சிங்கம், நம்ப வீட்டுப் பிள்ளை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ், சூர்யாவை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். முன்னதாக, சூர்யாவின் தயாரிப்பில் ‘பசங்க-2’ மற்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ என இரு படங்களை இயக்கியிருந்தார். இதில் ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, தன்னை வைத்து படமெடுக்கும் வாய்ப்பினை பாண்டிராஜிற்கு தந்தார் சூர்யா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா-பாண்டிராஜ் கூட்டணியில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் பெரிய ஹைப்பில் வெளியானது. ஆனால், […]