‘வதந்தி சீசன் 2’யிலிருந்து துள்ளலான ‘தெய்வா’ பாடல் வெளியீடு

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டுள்ளன. துள்ளலான இசை, உற்சாகமான தாளங்கள் மற்றும் வண்ணமயமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்தப் பாடல், சீரிஸின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இசையமைப்பாளர் சைமன் K. கிங் இசையமைத்து தயாரித்துள்ள இந்தப் பாடலை, சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். மணி ரோமியோ எழுதியுள்ள வரிகள், உற்சாகமான […]

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான ‘ராமாயணா’ டிரைலர்!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் Prime Focus Studios, எட்டு முறை ஆஸ்கர் விருது வென்ற VFX நிறுவனமான DNEG மற்றும் யஷின் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (ஜூலை 30) வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகின் மிகப் பழமையான […]

நடிகர் ரிஷிகாந்த்தின் மொத ராத்திரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஒரு திருமணம் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத குழப்பங்களையும் நகைச்சுவையான தருணங்களையும் பரிசளிக்கும். அப்படிப்பட்ட ஒரு சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம். முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய இந்த நகைச்சுவை திரைப்படம், ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண கிராமத்து திருமணத்தில் ஒரே இரவில் […]

1000 ரசிகர்களுடன் 6 மணி நேரம்… மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்த அல்லு அர்ஜுன்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து வந்த சுமார் 1,000 ரசிகர் மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுடன் நேரம் செலவிட்டார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களும் அதிக அளவில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர். வெறும் ரசிகர்கள் சந்திப்பு என்ற அளவைத் தாண்டி, அன்பும் நெருக்கமும் நிறைந்த குடும்பச் சந்திப்பாக இந்த நிகழ்வு அமைந்தது. ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுடன் சிரித்து, நடனமாடி, மனம் திறந்து […]

ஜெயராம் – அஷ்வின் இணையும் ‘குட் நியூஸ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. திட்டமிட்டபடி நடைபெற்ற இந்த ஷெட்யூல், படக்குழுவினரின் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பால் சிறப்பாக நிறைவு பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் குழு மற்றும் தயாரிப்பு நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறையினரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதால், எந்த தடையும் இன்றி […]