KAYILAN OFFICIAL TRAILER
KAYILAN OFFICIAL TRAILER | SSHIVADHA | RAMYA PANDIAN | ARUL AJIT
KAYILAN OFFICIAL TRAILER | SSHIVADHA | RAMYA PANDIAN | ARUL AJIT
Aariro Arariro Lyrical Video Tamil | Freedom | Sasikumar, Lijomol | Vaikom Vijayalakshmi | Ghibran
Oho Enthan Baby Official Trailer | Rudra | Mithila Palkar | Vishnu Vishal | Raahul | Jen Martin
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் […]
ஜனநாயகன் படம் குறித்து பிரியாமணி அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். விஜயின் கடைசி படம் என்பதால் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் சுமார் 90 கோடிக்கும் மேல் ஓவர்சீஸ் வியாபாரத்தில் சம்பாதித்துள்ளது. இதுவரை வேறெந்த தமிழ்ப் படங்களும் செய்திடாத வியாபாரத்தை ரஜினியின் ‘கூலி’ படம் செய்திருக்கின்றது. இதைத்தவிர, இப்படம் 100 நாடுகளுக்கும் மேல் ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ரஜினி படங்கள் வெளியாகாத ஒரு சில நாடுகளிலும் இப்படம் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் 100 நாடுகளுக்கு மேல் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் […]
சிம்பு-வெற்றிமாறன் இணைந்துள்ள வடசென்னை-2 திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ நேரடியாக திரையரங்கில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. முதலில் இந்த ப்ரோமோவை யூடியூபில் வெளியிடவே வெற்றிமாறன் முடிவெடுத்திருந்தார். அதன் பிறகு இந்த அறிவிப்பு ப்ரோமோவை நேரடியாக திரையரங்கில் வெளியிட்டால் என்ன? என யோசித்திருக்கிறார். சிம்பு -வெற்றிமாறன் கூட்டணி அவர்களின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில், தற்போது சிம்புவின் இந்த 49-வது திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஜூலை இரண்டாம் வாரத்தில் […]
விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தபு, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது தொடர்பாக விஜய் சேதுபதி தெரிவிக்கையில், ‘எனக்கு கதைப் பிடித்திருந்ததால் நடிக்கச் சம்மதிக்கிறேன். ஓர் இயக்குநரின் கடந்த கால தோல்விகளை வைத்து, அந்த இயக்குநரை எடை போடுவதில்லை. அப்படி ஏன் மதிப்பிட வேண்டும்? பூரி ஜெகன்நாத் இயக்கும் படம் முழுவதும் ஆக்ஷனை கொண்டது. இதற்கு முன் இப்படியொரு படத்தில் […]
சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் உலகளவில் ரூ.90 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தை வெறும் 15 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தனர். இப்படத்தை பலரும் பாராட்டியது அப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை தான். அவர் இயக்கிய முதல் படம் இது. ஆனால் பார்ப்பதற்கு அதுபோல் தெரியவில்லை என பாராட்டினார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி ஒரு முக்கியமான ரோலில் நடித்தும் இருந்தார் அபிஷன். அவரின் கதாபாத்திரம் படத்தில் மிகவும் எமோஷனலான ஒன்றாக வடிவமைக்கப்பட்டு […]
நடிகை சமந்தா, தற்போது தயாரிப்பாளராகி இருக்கிறார். இவர், ‘சுபம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. அந்த பாடத்தை தொடர்ந்து சமந்தா ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து அதில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கும் ஒரு ஹிந்தி வெப் தொடரிலும் நடித்து வரும் சமந்தா, மூன்று நாட்கள் செல்போனை பயன்படுத்தவில்லை என்ற, தகவலை […]