சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

சூர்யா 46 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, நட்டி நடராஜ், அனகா மாயா ரவி போன்ற பல […]

ரஜினியுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. விடுமுறை நாளான நேற்று ‘கூலி’ படம் இந்தியாவில் ரூ.34 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தமிழ் மூலம் அதிகபட்சமாக ரூ. 22.5 கோடி கிடைத்திருக்கிறது. தெலுங்கு மூலம் ரூ. 6.5 கோடியும், இந்தி மூலம் ரூ. 4.65 கோடியும், கன்னடம் மூலம் ரூ. 35 லட்சமும் கிடைத்திருக்கிறது. […]

மறைந்த மனைவியின் விலைமதிப்பற்ற நினைவு: ராகவா லாரன்ஸ் உருக்கம்..

‘எனது குடும்பமும் ஒரு காலத்தில் இதே போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டது’ என உருக்கமாக கூறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பல ஆண்டுகளாக, நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற தன்னால் முடிந்ததைச் செய்து உதவுகிறார். அதேபோல், மற்றொரு நடிகர் ராகவா லாரன்ஸும் யாரேனும் சிக்கலில் இருந்தால் உடனடியாகச் செயல்பட்டு, தான் நிறுவிய மாற்றம் அறக்கட்டளை மூலம் […]

அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: தவெக தலைவர் விஜய் கடிதம்..

நடிகரும் தவெக தலைவருமான விஜய் தற்போது, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பேசும் திரைப்படமாகும். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படம் வெளியாகிறது. கடைசிப்படமாக இந்த படத்தை முடித்துவிட்டு, விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், தவெக தொண்டர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நம் தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் […]

‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து நாகார்ஜூனா பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தில் சைமன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா, ரஜினியுடன் நடித்தது குறித்து கூறும்போது, ‘நானும் ரஜினியும் திரையில் சந்திக்கும்போது, ஒரு காந்த சக்தி இருப்பதை ரசிகர்கள் உணர்கிறார்கள். சிறப்பான படத்தின் ஒரு பகுதியாக […]

நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த ‘இரண்டாம் சௌத்ரி’ டாக்டர். பசலியான் நசரேத்: இயக்குநர் பி.சி. அன்பழகன் நம்பிக்கை

இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் சிவனி சதீஷ் நடத்திய சுதந்திர தின விழாவில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். பசலியான் நசரேத் அவர்களுக்கு விருது வழங்கி, இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது: ‘தமிழ்த் திரையுலகில் லவ்வர்ஸ், குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய வெற்றிப் திரைப்படங்களின் தயாரிப்பாளர் டாக்டர் பசலியான் நசரேத் நாஞ்சில் நாடு குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டத்திற்கென தனி பெருமைகள் உண்டு. இலக்கியத்திற்கு வள்ளுவர், தொல்காப்பியர். சினிமாவுக்கு […]

அஜித்தின் ‘ஏகே64’ படம் பற்றி இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்த்தில் உருவாக்கப்பட்டது. அதேபோல், படம் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அஜித் நடிக்கும் 64-வது படத்தையும் ஆதிக் இயக்கவிருக்கிறார். இந்த தகவலை அவர், உறுதிப்படுத்தி இருக்கிறார். ஏகே64-வது படத்தில், மிஷ்கின் வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், ஆதிக், அஜித்தின் 64-வது படம் குறித்து தெரிவிக்கையில் ‘குட் […]

தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும், மாஸ் காட்டி வருகிறார் இவரது நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருடா திருடி. இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சாயா சிங், கருணாஸ், இளவரசு, மாணிக்க விநாயகம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாமன்னன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மாரிசன் படத்தில் பகத் பாஸில் உடன் இணைந்து நடித்திருந்தார். இது திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சதீஷ் சங்கர் இயக்கிய இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டண், ரேணுகா, கிருஷ்ணா, […]

வீட்ல விசேஷம்.. மருதாணி கைகளுடன் ரட்சிதா சொன்ன குட் நியூஸ்..குவியும் லைக்ஸ்..!

வீட்ல விசேஷம் என்று மருதாணி கைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார் ரட்சிதா மகாலட்சுமி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி.அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]