சல்மான்கான் குடும்பத்தார் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: வைரலாகும் விமர்சனங்கள்..

பாலிவுட் நடிகர் சல்மான்கான் குடும்பத்தார் வேறு மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்திருக்கிறார்கள். அவர் வீட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை வலைதளத்தில் வெளியிட்டார் சல்மான் கான். விநாயகர் சிலைக்கு சல்மான்கான், அவரின் அப்பா சலிம்கான், அம்மா சல்மா ஆகியோர் ஆரத்தி எடுத்தார்கள். அந்த வீடியோவை பார்த்த சிலர் வரவேற்றுள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது, இதுதான் எங்கள் இந்தியா. இஸ்லாமியர்கள் கூட இந்து பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது. ஆச்சர்யங்களை அள்ளித்தெளிக்கும் அசத்தலான LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்பட டீசர் !! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் டீசர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம்!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் […]

தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியானது

பிரம்மாண்டத்தின் உச்சம், தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியானது ! ஹனுமேன் படம் போன்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெறும் அதிர்ஷ்டம் எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் “புதிய தலைமுறை சூப்பர் ஹீரோ” தேஜா சஜ்ஜா, விதியை வென்றவர் போலத் தெரிகிறார். ஹனுமேன் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிறகு, அவர் மீண்டும் “மிராய்” எனும் விறுவிறுப்பான பிரம்மாண்ட காவியத்துடன் திரையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருக்கிறார். ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்று, இப்போது இயக்குநராகியிருக்கும் கார்த்திக் கட்டமனேனி, மென்மை, […]

‘பெத்தி’ படத்துக்கான 1000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்ட பாடல் படப்பிடிப்பு!

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு, மைசூரில் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!! குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் […]

தரன் இசையில் முதன் முறையாக இணையும் ஆரி அர்ஜுனன் மற்றும் நரேன் கார்த்திகேயன்!

சியர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள கிம்ச்சி தோசா என்ற மியூசிக் வீடியோ ஆல்பம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் சின்னத்திரையில் பல ஷோகளை தயாரித்து கொண்டிருக்கிறது, குறிப்பாக வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது. இந்த கிம்ச்சி தோசா இசை வீடியோ ஆல்பம் மூலம் தனது இசை கம்பெனியான Cheers music என்ற ஆடியோ லேபிள் நிறுவனத்தை அறிமுகம் செய்கிறது. இந்த பாடல் இந்தோ கொரியன் கொலாபரேஷனில் உருவாகியுள்ளது.. இந்த சியர்ஸ் […]

இந்த வாரம், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.. ‘கெவி’ : இப்படம் கொடைக்கானல் மலைப்பகுதியில், சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆதவன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ‘மாயக்கூத்து’: ‘மாயக்கூத்து’ என்பது ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கிய படமாகும். நாகராஜன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் டில்லி […]

எனக்கு சம்பாத்தியம் இல்லை, குடும்பத்தில் கருத்து மோதலும் இல்லை: ஆர்.கே. செல்வமணி ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் செம்பருத்தி, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். அவ்வகையில், அவரது இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம், விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகி தியேட்டரில் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஆர்.கே.செல்வமணி, தன் மனைவி ரோஜா மீதான காதல் குறித்தும், குழந்தைகள் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‘நான் சம்பாதித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இப்போதும், அதே மரியாதை […]

‘கூலி’ பட உண்மையான வசூல் நிலவரம்: ஹம்சினி எண்டர்டெய்ன்மென்ட் எச்சரிக்கை..

‘கூலி’ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் குறித்து சில குழுக்களும், அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதாக ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘உண்மையான வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர்களும், ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் (வெளிநாட்டு விநியோகஸ்தர்) நிறுவனமும் மட்டுமே வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இணையத்தில் பரவும் மற்ற பாக்ஸ் ஆபீஸ் நம்பர்கள் நம்பகத்தன்மையற்றவை, அவை உண்மையாக கருதப்படக்கூடாது. மேலும், இட்டுக்கட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் அல்லது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடுகளைப் பரப்புவது, திரைப்படம், […]