விஜய்யின் ‘ஐனநாயகன்’ வெளியாகும் நாளில், பிரபாஸ் படமும் ரிலீஸ்..

அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகவுள்ளது. இது விஜய்க்கு கடைசிப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால், தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் விஜய். கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியாக ‘தி ராஜா சாப்’ படமும் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. இதனை ‘மிராய்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் விஷ்வ […]

வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து, இபபடம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டு படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. […]

ஜெய் நடிப்பில் உருவாகும் ‘ஒர்க்கர்’ படத்தின் பூஜை..

நடிகர் ஜெய் தற்போது ‘ஒர்க்கர்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வினய் வினய் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் ஜெய் உடன் இணைந்து யோகிபாபு, ரீஷ்மா நனையா, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசிலயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோரும் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க உண்மைக் கதையை மையப்படுத்திய படமாக உருவாகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக […]

சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ படம்: வெற்றிமாறன் அதிரடி முடிவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை குவித்திருந்தாலும், எஸ்டிஆரின் கதாபாத்திரம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து, வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் இணையும் படத்துக்கான ப்ரொமோ ஷுட்டிங்கும் துவங்கி நடைபெற்றது. ஆனால், பட்ஜெட் காரணமாக படத்தினை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தினை […]

விஷால்-தன்ஷிகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் வாழ்த்து..

சமீபத்தில் நடிகை தன்ஷிகாவை காதலித்து வருவதை உறுதிப்படுத்தினார் விஷால். இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் விஷால்-தன்ஷிகா இணைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். எங்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் முதல் திருமணமாக நடைபெறும் என விஷால் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். அவ்வகையில், இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு, மதியம் 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக விஷால் தெரிவித்திருந்தார். அதன்படி, தனது எக்ஸ் தளத்தில் விஷால், ‘இந்த பிறந்த நாளில் உலகின் அனைத்து மூலைகளில் […]

விஜய் பேசிய ‘அங்கிள்’ என்ற வார்த்தை குறித்து, கே.எஸ்.ரவிக்குமார் கருத்து..

மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசினார். இதற்கு பலவாறு விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவிக்கையில், ‘விஜய் பேசியது எனக்கு தவறாகப்படவில்லை. ஏனெனில், அவர் நேரில் பார்க்கும்போது கூட ‘குட்மார்னிங் அங்கிள், வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள்?’ என்று தான் சொல்வார். அதை இன்று பொதுவெளியில் சொல்லியிருக்கிறார். அதற்கு வேறு ஒரு அர்த்தம் கற்பித்து, ஒரு தரப்பு வேறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறது. நானே ரெட் […]