என்ன சொல்வதென்றே தெரியவில்லை: இளையராஜா நெகிழ்ச்சி..
இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இளையராஜா பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழாவை நடத்தியது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி […]