விரைவில் வெளியாகும் மர்மம் நிறைந்த ‘அரூபி’!
மலையாளத்தில் உருவாகியுள்ள திகில்-மர்மத் திரைப்படமான ‘அரூபி’யின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. “சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தை விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. […]