தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ‘அந்நியன்’ பாட்டுப் பாடி மகிழ்ந்த விக்ரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சீயான் விக்ரம், தனது எதார்த்தமான குணத்தாலும், ரசிகர்களிடம் காட்டும் அன்பாலும் எப்போதும் தனித்து நிற்பவர். தற்போது அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் விக்ரம். மூணாரில் சர்ப்ரைஸ் விசிட்! நடிகர் விக்ரம் அண்மையில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை அவர் எதிர்பாராத விதமாக நேரில் சந்தித்துப் பேசினார். […]

“கேள்வி கேட்பதிலும் கண்ணியம் அவசியம்”: பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சை குறித்து மாளவிகா மோகனன் ஆவேசம்!

சமீபகாலமாக சினிமா விழாக்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கேட்கப்படும் சில தேவையற்ற கேள்விகள் விவாதப் பொருளாக மாறி வருகின்றன. அந்த வகையில், பிரபல தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனன் அண்மையில் ஒரு தனியார் விழாவில் கலந்துகொண்டபோது நடந்த நிகழ்வு தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் விழா ஒன்றில் கலந்துகொண்ட மாளவிகா மோகனன், அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர், “நீங்கள் விஜய்யுடன் த்ரிஷா மாதிரி பயணிப்பீர்களா?” என்ற முற்றிலும் அநாவசியமான […]

96 பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில்! பூஜையுடன் துவங்கியது!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், “96” மற்றும் “மெய்யழகன்” படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில், முன்னணி நடிகர் பகத் பாசில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஐசரி கே. கணேஷ் தலைமையிலான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக உருவாகும் இந்த படம், அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில், தனித்துவமான கதைகள் மற்றும் […]

இயக்குநர் அட்லீ – ப்ரியா தம்பதியின் மகள் பெயர் மியூ!

தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைதள பதிவு மூலம் அறிவித்துள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் சூட்டியுள்ளதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட இந்த பதிவில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. மேலும், “எங்கள் காதலின் கலைக்கு இப்போது […]

தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது – இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்

மலையாளத்தில் வெற்றி பெற்ற “அதிரடி” திரைப்படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக உள்ளது. இயக்குநர் அருண் அனிருதன் இயக்கியுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அருண் அனிருதன், “இரண்டு […]