ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் ‘பெத்தி’ படத்தின் வெளிநாட்டு விநியோகத்தை அறிவித்தது!

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தனது முதல் சர்வதேச விநியோக முயற்சியாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்கள் மூலம் இந்திய சினிமாவின் தரத்தையே மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது வெளிநாட்டு விநியோகத் துறையிலும் தனது தடத்தை பதிக்கத் தயாராகியுள்ளது. சமீபத்தில் சர்வதேச விநியோகத்தில் களமிறங்க இருப்பதாக அறிவித்திருந்த நிறுவனம், அதன் முதல் அதிகாரப்பூர்வ முயற்சியாக ‘பெத்தி’ […]

சிவகார்த்திகேயன் வரிகளில் ‘வேலும் மயிலும்’ பாடல் வெளியானது!

நடிகர் சிவகார்த்திகேயன் தலைமையிலான சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தனது முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடலான ‘வேலும் மயிலும்’ பாடலை வெளியிட்டு, சுயாதீன இசை உலகிலும் புதிய அடியை பதித்துள்ளது. முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆன்மீக பாடலுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார். பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்த இசைப் படைப்பை இயக்கியுள்ளார். புதிய கதைகள் மற்றும் திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், […]

மீரா கதிரவன் இயக்கியுள்ள ஹபீபி திரைப்படத்திற்கு யு சான்றிதழ்

குடும்பங்கள் திரையரங்குகளில் கொண்டாடி ரசிக்க இருக்கும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு சென்சார் வாரியம் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மனித உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த உணர்வுப்பூர்வமான திரைப்படம், நல்ல கதையம்சத்துடன் குடும்ப பார்வையாளர்களை கவரும் வகையில் தயாராகியுள்ளது. மண் மணம் மிக்க கதையையும், உணர்ச்சிகளைத் தொட்டுச் செல்லும் திரைக்கதையையும் கொண்ட இப்படம், சென்சார் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. மேலும், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக ‘ஹபீபி’ உருவாகியுள்ளதாக சென்சார் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாக […]

‘தி பாரடைஸ்’ மறுபடப்பிடிப்பில் நானி? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில், தெலுங்குத் திரையுலகின் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’ (The Paradise). பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், ஏற்கனவே படமாக்கப்பட்ட சில […]

“அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் வெளியானது

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பாராட்டுகளை குவித்து வருகிறது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ளார். தடகள விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம், விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அங்கீகாரத்திற்கான போராட்டத்தை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது. வெளியான டிரெய்லரில், தனது உரிமைக்காக நீதிமன்றத்தில் போராடும் தடகள வீரரின் காட்சிகள் மற்றும் வலுவான […]

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: த்ரிஷா ஒப்பந்தம்? – கோலிவுட்டில் புதிய அதிரடி!

தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். தற்காலிகமாக ‘KHxRK’ என அழைக்கப்படும் இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளன. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில், முன்னணி நடிகை த்ரிஷா ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதனைப் […]

வடசென்னை 2 அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

‘வடசென்னை 2’ படம் குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த அப்டேட்டை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். சன் நெக்ஸ்டில் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடன் உரையாடிய அவர், ‘வடசென்னை 2’ தொடர்பான தகவலை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ‘வடசென்னை’ படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் நடத்திய ஆடிஷன் அனுபவத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். இரண்டு நிமிடங்கள் இடைவிடாமல் கெட்ட வார்த்தைகள் பேச சொல்லப்பட்ட சவாலான தருணத்தை […]