Browsing category

Tamil News

லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ படம் ரிலீஸ் தேதி !

‘லீடர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டரில் “World Wide APRIL 03 #LEADER” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் துரை செந்தில்குமார் (R.S. Durai Senthilkumar) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது அவரது இரண்டாவது படம். முக்கிய அப்டேட்: படம் சென்சார் போர்டில் இருந்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் ஆக்ஷன் கதையம்சம் கொண்டது. தொழில்நுட்பக் குழு: […]

சின்மயி குரலில் ‘நூறு சாமி’ படத்தின் முதல் பாடல் ‘மாயக் கனவோ’ வெளியீடு!

நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள நூறு சாமி திரைப்படத்தின் முதல் ஒற்றைப்படை (சிங்கிள்) பாடலான ‘மாயக் கனவோ’ (Maaya Kanavo) லிரிக் வீடியோ இன்று (மார்ச் 25, 2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பாடல் விவரங்கள்: பாடகர்கள்: சின்மயி ஸ்ரீபாதா (Chinmayi Sripada) & கபில் கபிலன் (Kapil Kapilan) இசை: பாலாஜி ஸ்ரீராம் (Balaji Sriram) பாடலாசிரியர்: மோகன் ராஜன் (Mohan Rajan) இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஸ்வாசிகா […]

விஜய் த்ரிஷா குறித்து தெரிந்துதான் பேசினேன்.. சமுத்திரக்கனி ஓபன்

வீடியோ எடுக்கும்போதே எனக்கு தெரியும்… அங்கு அந்த தம்பி மட்டும் தான் வீடியோ எடுத்தார். எனக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே வேறொரு விஷயம் பேசும் பழக்கம் இல்லை. சந்தோஷமாக இருந்தாலும், வலியாக இருந்தாலும், வேதனையாக இருந்தாலும் – அது எப்படி இருக்கிறதோ அப்படியே வெளிப்பட வேண்டும் என்பதே என் எண்ணம். அந்த வீடியோவுக்கு மானே தேனே சேர்த்து, நம்ம தம்பிகள் வேறு விதமாக பரப்பிட்டாங்க. ஆனால் அதைக் குற்றமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை; அதைப் […]

“இணைந்து பணியாற்ற மிகச் சிறப்பான மனிதர் அஜித் குமார்” – நடிகை ரெஜினா கசாண்ட்ரா

அஜித் சாருடன் நடிக்கப் போகும் முன், அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவருடன் பணியாற்றிய பிறகு அவர் எவ்வளவு அற்புதமான மனிதர் என்பதை உணர்ந்தேன். அவர் உடன் பணியாற்றும் கலைஞர்களை எப்போதும் ஊக்குவிக்கும் விதத்தில் நடந்து கொள்வார், குறிப்பாக பெண்களிடம் அதிக அக்கறையுடன் இருப்பார். ஒரு பெண்ணாக இந்தத் துறையில் அது எனக்கு மிகவும் நல்ல உணர்வை அளித்தது. ஒரு நாள் அவர் தானாகவே வந்து, “நேற்று எல்லோருக்கும் மட்டன் செய்து […]

இந்தியாவின் முதல் மொட்டோகிராஸ் படம் ‘பைக்கர்’

முன்னணி நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி உள்ளிட்டோர் நடித்துள்ள “பைக்கர்” திரைப்படம், இந்தியாவின் முதல் மொட்டோகிராஸ் (Bike Sports) திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ள இப்படம், UV Creations தயாரிப்பில் விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். பான் இந்திய அளவில் உருவாகியுள்ள இந்த படம், தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 2026 ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் […]

‘கான் சிட்டி’ டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஃநெட்ப்ளிக்ஸ்

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. அதற்குச் சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே கிடைத்த இந்த ஒப்பந்தம், படத்தின் மீதான ஹைப் மேலும் உயர்த்தியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி”, ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. நகர வாழ்க்கையில் […]

சேப்பாக்கத்தில் களைகட்டிய ‘ரோர் 26’ – பத்ரி வெங்கடேஷின் மாபெரும் மேடை நிகழ்ச்சி!

‘பாணா காத்தாடி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியை சிறப்பாக இயக்கி கவனம் பெற்றுள்ளார். இந்த விழாவில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களுடன், நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்தார். நிகழ்ச்சியை ஆர்.ஜே. பாலாஜி, அனிருத் ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் […]

சூர்யா – கார்த்தி இருவரும் ‘யூத்’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு! புகைப்படங்கள் வைரல்

கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் திரைப்படம் மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதில் இருந்து நல்ல விமர்சனங்களும், ரசிகர்களின் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. தற்போது உலகளாவிய வசூலில் ரூ.30 கோடியை தாண்டியுள்ள யூத், 50 கோடி மைல்கல்லைத் தொடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவரும் ‘யூத்’ படத்தைப் பார்த்துவிட்டு, மொத்த படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினர். படக்குழுவினருடன் இருவரும் […]

ரஜினியுடன் கதை விவாதம்: அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த சுவாரசியமான அனுபவம்!

‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்துடன் தனது கதை விவாத அனுபவத்தை ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். ரஜினிகாந்தின் 173வது படம் (தலைவர் 173) தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கு முன்பு பல இயக்குநர்கள் ரஜினியிடம் கதை சொல்லிய நிலையில், அஸ்வத் மாரிமுத்துவும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அஸ்வத் மாரிமுத்து பேட்டியில் கூறியதாவது: “சிம்பு படத்துக்காக (STR 51) கதை எழுதிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் கதையை நகர்த்த முடியாமல் […]

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இந்த படம், வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என டீசர் காட்டுகிறது. வெளியான டீசர் முழுவதும் அதிரடி சண்டைக் காட்சிகளால் நிரம்பியிருக்கிறது. இது ஒரு காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஆக்ஷன் கதையாக உருவாகியிருப்பது தெளிவாகிறது. மலையாள திரையுலகை மட்டுமல்லாமல், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இந்த படம் முக்கிய இடத்தைப் பெறும் […]