Browsing category

Tamil News

தனுஷுக்கு ஓகே, சிம்புவுக்கு நோ, ஏன் இப்டி?: அனிருத்திற்கு ரசிகர்கள் கேள்வி

அனிருத்துக்கு, சிம்பு ரசிகர்கள் கேள்விக்கணை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சிம்பு பிறந்த நாளில் வெளியான, சிம்புவின் 49-வது படம், 50-வது படம் மற்றும் 51-வது படம் என்பது தெரிந்ததே. இந்த 3 படங்களில் 50-வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 49-வது மற்றும் 51-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதில் 49-வது படம் மற்றும் 51-வது படத்தில் இசையமைக்க, சிம்பு தரப்பில் இருந்து அனிருத்தை அணுக, அவர் நோ சொல்லி அனுப்பியுள்ளார். […]

85 வயதில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’: பப்ளிக் ரிவ்யூ

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பார்த்த பொதுமக்கள் கவுண்டமணியை மீண்டும் திரையில் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என சந்தோஷித்து உள்ளனர். அவர் ஏன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடிக்காமல் விட்டுவிட்டார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 85 வயதில் ஹீரோவாக கவுண்டமணி நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த மக்கள் படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்களையும் […]

காதலர் தினத்தை முன்னிட்டு, திரிஷா வீட்டுக்குள் குடியேறிய புதியவர்

லவ்வர் டே அன்று தனது வீட்டுக்கு ‘ஒருவரை’ அழைத்து வந்துள்ளார் திரிஷா. இது பற்றிய விவரம் காண்போம்.. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதை ஈடு செய்யும் விதமாக ‘குட் பேட் அக்லி’ தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் திரிஷாதான் ஜோடி. ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘விடாமுயற்சி’ தற்போது வரையில் ரூ.125 கோடி வசூல் குவித்திருக்கிறது. அஜித் படங்களை தொடர்ந்து திரிஷா, தக் லைஃப், […]

‘ஃபயர்’ திரைப்படம் எப்படி?: இயக்குனர் டி.ராஜேந்திரன் வெளியிட்ட பதிவு

‘ஃபயர்’ திரைப்படம் குறித்து டி.ராஜேந்தர் தெரிவித்துள்ள தகவல் பார்ப்போம்.. ‘ஃபயர்’ திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகி, பெண்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகிறார்கள். நல்ல மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள். பெண்கள் யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது. எந்த இடத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெண்களை காதலித்து ஏமாற்றும் ஆண்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என படம் பார்த்த பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்திரன் […]

எங்களது ரிலேஷன்ஷிப் தொடரும்: ஜி.வி.பிரகாஷ் பற்றி சைந்தவி

‘இல்லறத்தில் பிரிந்தாலும், இசையால் இணைந்திருக்கிறோம்’ என்கிறார் சைந்தவி. இது குறித்த இசைக்காதல் காண்போம்.. ஜி்.வி.பிரகாஷ்-சைந்தவி காதல் தம்பதியர் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில், அவர்களது திருமண வாழ்க்கையில் சில விரிசல்கள் வர ஆரம்பித்தன. அதற்கு காரணம், ஜி்.வி. பிரகாஷ் நடிக்க வந்ததுதான் என பலர் கூறினர். அந்த விரிசல் மேற்கொண்டு பெரிதாகி இருவரும் பிரிந்து விட்டார்கள். இருப்பினும், ஜி.வி. பிரகாஷின் இசை கச்சேரியில் கலந்துகொண்டு சைந்தவியும் பாடினார். […]

ரேணுகா கலந்த மருந்து, மயங்கிய சூர்யா, பதறிப்போன குடும்பத்தினர், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலத்திடம் சூர்யா நல்ல வேளை நீ குடிக்காம இருந்தா அதனால ப்ளட் கொடுக்க முடிஞ்சது என்று சொல்ல அதெல்லாம் விடுங்க டாடி எனக்கு […]

சத்தம் இல்லாமல் நடந்து முடிந்த வனிதாவின் திருமணம்.. வைரலாகும் வீடியோ.!!

சத்தமில்லாமல் வனிதாவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி காக்கை சிறகினிலே ,நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுனு இருக்கு போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவருக்கு ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் நடந்துள்ளது. ஏற்கனவே அவர்கள் இருவரும் இணைந்து மிஸஸ் and மிஸ்டர் என்ற திரைப்படத்தில் […]

டைட்டான உடையில் கையை தூக்கி போஸ் கொடுக்கும் யாஷிகா..!

டைட்டான உடையில் கையை தூக்கி போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அதனைத் தொடர்ந்து கழுகு 2, ஜாம்பி, பெஸ்டி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

சினேகன் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்.. போட்டோஸ் இதோ.!!

சினேகன் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பலரது மனதை கவர்ந்தவர் சினேகன் இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக சினேகன் அறிவித்து இருந்தார். சமீபத்தில் அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்துள்ளார் அப்போது கமல்ஹாசன் குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்து “காதல் கவிதை” என பெயர் சூட்டியுள்ளார். இதனை கன்னிகா […]

விடாமுயற்சி : 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]