Browsing category

Tamil News

கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘‌ படக் கொண்டாட்டம்

‘சீயான்’ விக்ரம் ரசிகர்களால் ஸ்தம்பித்த கரூர், ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்!! சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். இதன் ஒரு பகுதியாக கரூர் சென்றபோது, ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூட, மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ரசிகர்களின் உற்சாக வரவேற்பில், மனம் நெகிழ்ந்த சீயான் விக்ரம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் […]

அரசியல் ஆடுகளம்: ‘ஜனநாயகன்’ படத்தை எதிர்கொள்ள ‘பராசக்தி’ பராக் பராக்

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமை விற்பனையான நிலையில், இப்படம் குறித்த அரசியல் சடுகுடு பார்ப்போம்.. விஜய்யின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜு, கெளதம் மேனன், பாபி தியோல், டீஜே அருணாச்சலம் என பலர் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் […]

‘எம்புரான்’ படத்துக்கு எதிராக, நானும் எதிர்க்கிறேன்: சீமான் சீற்றம்

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் ரிலீஸ் ஆனதில் இருந்து தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்படத்தில் இருந்து சில சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை படக்குழு நீக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இருந்தும் அப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவ்வகையில், சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ‘இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மலையாள […]

வடிவேலு-பகத்பாசில் இணைந்து நடித்த ‘மாரீசன்’ எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ள 98-வது படம் பற்றிப் பார்ப்போம்.. மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடித்த ‘மாரீசன்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு தேதியை பகத் பாசில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, இப்படம் (தேதி குறிப்பிடாமல்) வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகத் பாசிலும் வடிவேலுவும் நேருக்கு நேர் நிற்கும் போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது. ‘மாரீசன்’ […]

ஹீரோ-வில்லன் இருவருமே வலுவானவர்கள்: ‘சர்தார்’ கார்த்தி அப்டேட்

சர்தார்-2 படத்தின் அப்டேட்டாக, கார்த்தி தெரிவித்த தகவல் காண்போம்.. மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘சர்தார்’ படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ‘சர்தார் 2’ உருவாகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் முதல் தோற்ற புரொமோ வீடியோ வெளியீட்டு விழாவும் நடந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவ்வகையில், ‘சர்தார்-2’ படம் குறித்து கார்த்தி தெரிவிக்கையில், ‘சர்தார்’ என்று பெயர் வைத்ததில் […]

விஜய்யின் தந்தை எஸ்ஏசி தனிக்கட்சி தொடங்குகிறார்; தவெக ரியாக்‌ஷன் என்ன?

எஸ்.ஏ.சந்திரசேகர் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையே, விஜய் வளர்ச்சியில் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் உழைப்பும் தெரிந்ததே. இச்சூழலில், இருவருக்கும் அரசியல்ரீதியாக இடைவெளி ஏற்பட்டது. அதற்கு காரணமாக, தற்போது, தவெகவின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்தான் என சொல்வதுண்டு. இருப்பினும், விஜய் தனது தாயையும் தந்தையையும் அடிக்கடி […]

ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?

ஜனநாயகன்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ, பிரியாமணி ,மோனிஷா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். இது விஜயின் கடைசி படம் […]

வெஸ்டர்ன் லுக்கில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

வெஸ்டர்ன் லுக்கில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவருக்கு இந்த சீரியல் நல்ல வரவேற்பை கொடுத்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெஸ்டர்ன் லுக்கில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை […]

இந்த மாதம் வெளியாகும் மூன்று தமிழ் படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.

இந்த மாதம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியானாலே ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக இருப்பது வழக்கம். அதிலும் ஒரு சில படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.அந்த வகையில் இந்த மாதம் வெளியாகபோகும் மூன்று திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். அஜித் குமார் நடிப்பிலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் உருவாகி உள்ள குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நயன்தாரா மற்றும் […]

தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு..!

தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]