Browsing category

Tamil News

ராஜமவுலி-மகேஷ்பாபு படத்தின் ஷுட்டிங் அப்டேட்

ராஜமவுலி தற்போது இயக்கும் படத்தின் அப்டேட் பார்ப்போம்.. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படங்களை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் பிரம்மாண்ட படம் தயாராகி வருகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவுமின்றி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தினை ஒரு பாகமாக மட்டுமே எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி. ஏனெனில், பலரும் இரண்டு பாகங்களாக உருவாக்கி வருவதால், அதில் நாமும் இணைய வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். முன்னதாக ‘பாகுபலி’ படத்தின் மூலம் இரண்டு பாகங்கள் […]

தனுஷின் ‘குபேரா’ ரிலீசுக்கு பிறகு ‘இட்லி கடை’ ரிலீஸ்

‘நிலவுக்கு..’ படம் தோல்வியடைந்த நிலையில், ‘இட்லி கடை’ படத்தை வெற்றியாக்கும் முனைப்பில் இருக்கிறார் தனுஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பன்முகத் திறமை பெற்ற நடிகர் தனுஷ், தனது அக்கா மகன் பவிஷை வைத்து இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. அதே நாளில் ரிலீஸான ‘டிராகன்’ செம ஹிட்டாகி ரஜினியின் பாராட்டும் பெற்றது. இதற்கிடையே அவர் ‘இட்லி கடை’ திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இவருக்கு நித்யா மேனன் […]

காதலனை விட்டு பிரிந்ததற்கு காரணம் என்ன?: நடிகை சானியா ஐயப்பன் விளக்கம்

’22 வயதாகும் சானியாவின் காதல் முறிவுக்கு என்ன காரணம்’ என்ற தகவல் காண்போம்.. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவர்ந்தவர் நடிகை சானியா ஐயப்பன். மலையாள படங்களை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் இறுகப்பற்று, ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த சொர்க்கவாசல் திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது சர்ச்சைகளில் சிக்கிய ‘எம்புரான்’ படத்திலும் சானியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 22 வயதாகும் சானியா தன்னுடைய காதலானது தோல்வியில் முடிந்ததாக கூறியுள்ளார். இதற்கான காரணத்தை […]

‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ‘ரெய்டு’

‘எம்புரான்’ பட சர்ச்சையை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் பிருத்விராஜ் இயக்கி, மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கிடையே இப்படம் சர்ச்சைகளிலும் சிக்கி, மறு எடிட்டிங்கிற்காக அனுப்பப்பட்டு படத்தில் 24 மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய பதிப்பு திரையரங்குகளில் வெளியானது. எடிட்டிங்கிற்குப் பிறகு, படத்தின் ஆன்லைன் முன்பதிவில் சரிவு ஏற்பட்டாலும், அது […]

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு

மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள’ […]

வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த ‘சீயான்’ விக்ரம் !!

’52 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ‘ வீர தீர சூரன் !! சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் […]

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 6 திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரிட் திரைப்படம் எது?

இந்த வாரம் ஓடிடியில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகும் படத்துக்கு ரசிகர்கள் எவ்வளவு வரவேற்பை கொடுத்து வருகிறார்களோ அதே அளவு ஓடிடியில் வரவேற்பை கொடுத்து வருகின்றனர். ஒரு சில படங்கள் நேரடியாகவும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஆறு திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். நயன்தாரா, மீரா ஜாஸ்மின், சித்தார்த் ,மாதவன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் […]

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த இட்லி கடை படக்குழு..வைரலாகும் பதிவு.!!

புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ்.பவர் பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் .அதனை தொடர்ந்து ராயன்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படம் டான் பிக்சர் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகி வருகிறது. மேலும் ராஜ்கிரண், நித்யா […]

வீர தீர சூரன் படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

நீச்சல் உடையில் விதவிதமாக போஸ்.. இணையத்தை கலக்கும் ராய்லட்சுமி..!

நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராய் லட்சுமி. கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து குண்டக்க மண்டக்க, வால்மீகி, தர்மபுரி, தாம் தூம், முத்திரை, வாமனன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]