Browsing category

Tamil News

பான் இந்தியா படமாக ரிலீஸாகும் ‘கண்ணப்பா’ படத்தின் அப்டேட்ஸ்

பிரபலங்கள் பலர் இணைந்துள்ள ‘கண்ணப்பா’ பட தகவல்கள் காண்போம்.. ‘பெரிய புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் குறித்து யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாவீர்கள்’ என்று முன்னதாக விடுத்த நடிகர் ரகுபாபுவின் எச்சரிக்கை கவனம் பெற்றுள்ளது. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ள சிவ பக்தர் கண்ணப்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, படத்தை தயாரித்திருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார். […]

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்

விஜய்யின் அரசியல் பேசும் படம் ‘ஜனநாயகன்’. இப்படம் பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் அல்ல. தற்போது ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடித்தன. மற்ற நடிகர்களின் காட்சிகள் இன்னும் சில நாட்களில் நிறைவுபெறும். கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத். இப்படத்தினை லலித்குமார் தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு […]

வனிதா இயக்கிய ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ பட போஸ்டர்; ரஜினி வெளியிட்டார்

‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்ஸ்’ பட தகவல்கள் பார்ப்போம்.. விஜயகுமார் – மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக ரீ என்ரி கொடுத்துள்ளார். தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ படம் மஞ்சுளாவின் பிறந்த நாளான ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ளது. வனிதாவின் விவாகரத்து, மீண்டும் திருமணம் என அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இணையத்தில் வைரலானது. பின்னர், அவருக்கு விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மீண்டும் திரை வெளிச்சத்தைக் கொடுத்தது. […]

விஜய் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிக்கு, தவெக கட்சியில் பதவி

விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ள அருண்ராஜ் பற்றிய தகவல்கள் காண்போம்.. தவெக தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் அந்த கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில், மூன்றாவது பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் வீட்டில் வருமான வரி சோதனை செய்த அருண்ராஜ்க்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி […]

ஆர்யா நடித்த ‘அனந்தன் காடு’ டீசர் ரிலீஸ்

‘அனந்த காடு’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. ஆர்யா நடித்துள்ள ‘அனந்தன் காடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. 2023-ம் ஆண்டு ஆர்யா நாயகனாக நடித்து வெளியான படம் ‘காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம்’. அதனைத் தொடர்ந்து சில படங்களில் வில்லன், கவுரவ கதாபாத்திரம் என நடித்து வந்தார். தற்போது மீண்டும் நாயகனாக திரும்பி இருக்கிறார் ஆர்யா. இதற்கு ‘அனந்தன் காடு’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். வினோத் குமார் தயாரித்துள்ள இப்படத்தினை ஜீயன் கிருஷ்ணகுமார் […]

டிடி நெக்ஸ்ட் லெவல் : ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்திலும், ஆர்யாவின் தயாரிப்பிலும் உருவான இந்த படத்தில் கஸ்தூரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் […]

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான சூப்பர் தகவல்..!

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டிஆர்பியில் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்களை தொடர்ந்து பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே மருமகள் மற்றும் மூன்று முடிச்சு சீரியல் மகா சங்கமம் வரப்போவதாக தகவல் வெளியானது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் சூப்பரான தகவல் […]

ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்து..!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் விசேஷம் நடந்துள்ளதால் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அர்ஜூன். பல்வேறு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் கடந்த வருடம் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா உடன் திருமணம் நடந்து இருந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் […]

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’

‘ப்ரோகோட்’ ( BroCode)படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன் கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘ப்ரோகோட்- ( BroCode) ‘ படத்தில் நடிக்கும் ரவி மோகன் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட்- ( BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் […]

காட் ஆஃப் மாஸஸ்’ , ‘பத்ம பூஷண்’ டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியீடு

‘காட் ஆஃப் மாஸஸ்’ நந்தமுரி பாலகிருஷ்ணா – பிளாக் பஸ்டர் ஹிட் பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு – ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் – எம் . தேஜஸ்வினி நந்தமுரி கூட்டணியில் தயாராகும் ‘அகண்டா 2 : தாண்டவம் ‘ படத்தின் டீசர் ‘பத்மபூஷண் ‘ பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகிறது. ‘காட் ஆப் […]