Browsing category

Tamil News

நடிகர் நானியுடன் இயக்குனர் சௌரவ் கூட்டணி

கதைகள் ஆயிரம். அதற்கு பொருந்தும் நடிகர்கள் முக்கியம். அவ்வகையில், ஒரு நிகழ்வு காண்போம்.. ‘ஹாய் நானா’ கூட்டணியான நானி – இயக்குனர் செளரவ் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். செளரவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், ஜெயராம், நாசர் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹாய் நானா’. 2023-ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இப்படம் கமர்ஷியலாக வெற்றியை கண்டது. மேலும், திரைக்கதை, பாடல்கள், நடிப்பு, இசை என அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டது. ‘ஹாய் நானா’ படத்துக்குப் பிறகு […]

சூர்யா,பிரபு இடையே ஏற்பட்ட மோதல்.. ஆதிரை, நந்தினியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு, மருமகள் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் டான்ஸ் போட்டி நடந்து முடிய இருவரும் […]

விஜய்யின் பிறந்தநாள்: தாய் ஷோபா சங்காபிஷேகம், சிறப்பு பூஜை

தளபதி விஜய் இன்று (ஜூன் 22) தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, படக்குழு சார்பில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றே வெளியிடப்பட்டிருந்தது. அதில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், விஜய் காக்கிச்சட்டையுடன் உயர் அதிகாரியாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ள படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளது. நேற்று இரவே, வலைதளங்களில் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் […]

இயக்குனர் நெல்சனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் உருவாகி வருகிறது. இப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினி நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறு சில முக்கிய கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். அவ்வகையில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது மற்றொரு முக்கியமான சிறு கதாபாத்திரத்தில் […]

விஜய் பிறந்த நாளில், ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் ரிலீஸ்; இதோ வைரலாகும் நிகழ்வு

தளபதி விஜய்க்கு இன்று 51-வது பிறந்த நாள். அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, மற்றுமொரு புதிய போஸ்டரை ‘ஜனநாயகன்’ படக்குழு வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் காவல் சீருடையில் மிடுக்காக வந்து கவனம் ஈர்க்கிறார். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி தெறிக்கிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படம் அவரது கடைசிப் படமாகும். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் […]

தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் கலெக்‌ஷன் விவரம்

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான ‘குபேரா’ பட கலெக்‌ஷன் பற்றிப் பார்ப்போம்.. ‘குபேரா’ படம் இரண்டு நாட்களில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும், இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் கண்டிப்பாக இன்றைய வசூலும் அதிகமாக இருக்கும். படத்திற்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் இருப்பதால், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இப்படம் 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், குபேரா படத்தின் மூலம் தனுஷ் புது சாதனையை நிகழ்த்த இருக்கின்றார். அதி […]

இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: சல்மான்கான் விளக்கம்

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் உறவுகள், தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சல்மான் கான், ‘நான் இத்தனை ஆண்டுகளாக உழைத்து சேர்த்து சொத்துக்களை விவாகரத்தின் மூலமாக ஒரு பெண்ணுக்கு தர விரும்பவில்லை’ என்று கூறினார். […]

தளபதி விஜய்க்கு 51-வது பிறந்தநாள்: ரசிகர்கள்-திரைப் பிரபலங்கள் வாழ்த்து

தளபதி விஜய் இன்று ஜூன் 22-ந்தேதி தனது 5-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், அவரது கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படக்குழு தரப்பில் இருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரைப் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்களின் வாழ்த்து குறித்தும் காண்போம்.. நடிகர் ராஜு மோகன், விஜய் உடன் […]

குபேரா : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

குபேரா படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா போட்ட பதிவு..!

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இன்று விஜய்க்கு 51ஆவது பிறந்தநாள் என்பதால் […]