Browsing category

Tamil News

எனக்கு கடன் பிரச்சினை இருக்கிறது: விஜய் சேதுபதி ஓபன் டாக்..

கூத்துப்பட்டறையில் இருந்து திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜய் சேதுபதி. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், விக்ரம் வேதா, 96 உள்பட பல படங்களின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் வெளிப்படையாக பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘பலரும் கடனை அடைக்கும் […]

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன்?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘தலைவர்-173’ படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். இந்நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல்முறையாக ரஜினியுடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இச்சூழலில் ‘அருணாச்சலம்’ படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினியை இயக்கவுள்ளீர்கள். அதேபோல், கமலை மீண்டும் இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர்.சி, ‘கமல் சாருடைய ‘சலங்கை ஒலி’ படத்தைபார்த்த பிறகு தான் சினிமாவிற்கு வர விரும்பினேன். அதேபோல், அவருடைய ‘மைக்கேல் மதன காமராஜன்’ […]

காலை முதல் இரவு வரை நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை..

ஸ்ரீகாந்த்-ஷாம் ஆகியோர் இணைந்து நடித்த ‘தி டிரெய்னர்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், […]

ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு ‘செவாலியர்’ விருது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

புகழ்பெற்ற ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் […]

13 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜெயிலர்-2’ படத்தில் இணையும் நடிகை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிற மொழிக் கலைஞர்கள் அதிகம் நடிப்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகை மேக்னாராஜ் சார்ஜா நடிக்கவிருக்கிறார். இவர், 2010-ம் ஆண்டு வெளியான ‘காதல் சொல்ல வந்தேன்’ படம் மூலம் தமிழ்த் திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி, உயர்திரு 420, நந்தா நந்திதா என […]

நடிகைகள் ரேவதி, ரஞ்சனி, ராதா குறித்து கே.பாக்யராஜ் சுவாரஸ்ய தகவல்..

‘ஐபிஎல்- இந்தியன் பீனல் லா’ திரைப்படம் வருகின்ற 28-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தில் கிஷோர், டிடிஎஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெரேடி, ‘ஆடுகளம்’ நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது, ‘நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தார். அவருடைய வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. சிறிது காலம் காத்திருங்கள் என்று சொன்னேன். இந்த இடைவெளியில் எங்கள் […]

‘காந்தா’ படம் தொடர்பாக, துல்கர் சல்மானுக்கு கோர்ட் உத்தரவு..

எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘காந்தா’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்குக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 64 வயதான தியாகராஜன் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், கொச்சியைச் சேர்ந்த Wayfarer Films Private Limited மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த […]

மறைந்த நடிகர் அபினய்யின் மதுப் பழக்கம் பற்றி, நடிகை விஜயலட்சுமி பதிவு..

மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில் அபினய்யும் நடித்தார். அப்போது அபினய் விளம்பர உலகில் நம்பர் 1 ஆக இருந்தார். நான்கு நாட்கள் படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்தோம். ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு வட இந்திய குழு எங்களை அங்கே இறக்கிவிட்டு சென்று விடுவார்கள். அப்போது இந்த விஜியாக இருக்கவில்லை. […]

முருகன் கோவில் சுவாமி தரிசனம் செய்த யோகி பாபு.. போட்டோ இதோ..!

முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு.முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். படங்களில் ஒரு பக்கம் பிஸியாக நடித்து வந்தாலும் யோகி பாபு கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். […]

வாட்டர் மெலன் ஸ்டாரை கலாய்த்து பாட்டு பாடிய கானா வினோத் மற்றும் கம்ருதீன்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கானா வினோத் மற்றும் கம்ருதீன் இருவரும் வாட்டர் மெலன் ஸ்டாரை கலாய்த்து பாட்டு பாட அனைவரும் ரசித்து பார்க்கின்றனர். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி […]