Browsing category

Tamil News

‘பராசக்தி’ படத்தின் கதை என்ன தெரியுமா?: வைரலாகும் தகவல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் இப்படம் களமிறங்குகிறது. பராசக்தி படத்தின் ஓடிடி உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளது. இந்த படத்தில் ரவிமோகன் வில்லனாக வருகிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம், இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா […]

எனக்கு சவாலாக இருந்தது:’ரெட்ட தல’ படம் பற்றி அருண் விஜய்..

பாலா இயக்கத்தில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்த ‘இட்லி கடை’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்​திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘ரெட்ட தல’. கிரிஷ் திருக்​குமரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்​ளார். பிடிஜி யூனிவர்​சல் சார்​பில் பாபி பாலச்​சந்​திரன் […]

ஆதாரம் இல்லாமல் பேசுவதா?: நடிகை ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை..

நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையை தொடர்ந்து தெலுங்​கு, இந்​திப் படங்​களிலும் நடித்து வரு​கிறார், ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது உடலில் சில இடங்​களில் பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்துள்​ள​தாக டாக்​டர் பிர​சாந்த் என்பவர், சில நாட்களுக்கு முன் வெளி​யிட்ட வீடியோவில் தெரிவித்திருந்​தார். அதில், ரகுல் ப்ரீத் சிங்கின் தற்​போதைய மற்​றும் முந்​தைய புகைப் ​படங்​களை வெளியிட்​டுள்​ளார். கன்​னம், தாடையை […]

‘ஜெயிலர்-2’ படத்தில், ஒரு பாடலுக்கு பிரபல நடிகை நடனம்..

சூப்பர் ஸ்டார் ரஜினி​காந்த் நடிக்​கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்​சன் திலீப் ​கு​மார் இயக்கி வரு​கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்​சரமுடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. இந்​நிலை​யில், இப்படத்தில் இந்தி நடிகை நோரா பதேஹி, ஒரு பாடலுக்கு ஆடுகிறார். ரஜினி​யின் ‘ஜெ​யிலர்’ படத்​தில் தமன்னா ‘காவாலா’ என்ற பாடலுக்கு ஆடி​யிருந்​தார். அந்​தப் பாடல் வைரலானது. இதையடுத்து ‘கூலி’ படத்​தில் பூஜா ஹெக்டே, ‘மோனிகா’ […]

திரைத்துறையினருக்கு’ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் விருது வழங்கும் விழா..

தமிழ் திரைத்​துறை​யினருக்​காக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் திரைப்பட விருது விழா, ஜனவரி 25-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. தயாரிப்​பாள​ரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், இப்​போது டூரிங் டாக்​கீஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரு​கிறார். இதன் மூலம் திரைபிரபலங்​களின் நேர்​காணல்​களை வெளி​யிட்டு வரும் அவர், அடுத்த கட்​ட​மாக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம் ’ என்ற பெயரில் திரைப்​படத் துறையினருக்​கான விருது விழாவை நடத்துகிறார். இதுபற்றி சித்ரா லட்​சுமணன் தெரிவிக்கையில், ‘நான் டூரிங் டாக்கீஸ் சேனலை […]

தொடர்ந்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்து, துணிகளை அள்ளிச் சென்றார் நடிகை ஜாங்கிரி மதுமிதா

டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால், எந்த சிரமமும் இன்றி அணுக முடிகிறது. 2-வீலர், 4-வீலர் வாகனங்களுக்கு விசாலமான பார்க்கிங் வசதியும், ரயில் மற்றும் பேருந்து மூலம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் அடையக்கூடிய வசதியும் இருப்பதால், வேலவன் ஸ்டோருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் […]

‘ஜனநாயகன்’ படத்துடன் விஜய்க்காக உருவாக்கப்பட்ட 16 நிமிட சிறப்பு வீடியோ..

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் தற்போதைய தகவல்கள் பார்ப்போம்.. விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் வெளியான ‘பகவந்த்கேசரி’ படத்தை தழுவி தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அரசியல் பேசும் படமாகவும் அதே நேரத்தில் கமர்ஷியலாகவும் எடுக்கப்பட்டுள்ளது.இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்பட பலர் […]

சீண்டலாக கேள்வி கேட்டவருக்கு, நடிகர் சுதீப் செம பதிலடி; வைரலாகும் நிகழ்வு..

சமீபத்தில், நடிகை சினேகாவிடம் ஒரு நபர் ‘உங்கள் அழகின் ரகசியம் என்ன?’ என கேள்வி கேட்டதற்கு, அருகிலிருந்த பிரசன்னா, ‘கேள்வி கேட்டவரைப் பார்த்து நாக்கை துருத்தி செல்லமாக மிரட்டினார். அதுபோல ஒரு நிகழ்வு இதோ. இது வேறலெவலில் வைரலாகும் சுதீப்பின் பதிலடி.. விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க்’ என்ற படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 25-ந்தேதி ரிலீஸாகிறது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து […]

விஜயகாந்துடன் பழகிய எனது காலங்கள்: சரத்குமார் நெகிழ்ச்சி பேச்சு..

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள ‘கொம்புசீவி’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். புதுமுகம் தார்னிகா, சுஜித் ஷங்கர், கல்கி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 19-ந்தேதி வெளியாகிறது. இப்படம் தொடர்பாகவும் கடந்த கால நிகழ்வுகள் குறித்தும் சரத்குமார் தெரிவிக்கையில், ‘இந்தப் படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில், என் […]

‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமை விற்பனை ஆனது..

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ’பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதன் ஓடிடி உரிமம் விற்கப்படாமல் இருந்தது. இப்படத்தின் உரிமையினை ஓடிடி நிறுவனங்கள் வாங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகின. ஏனென்றால், இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் நடந்த கதை எனவும் கூறப்பட்டது. இதனிடையே, ஜீ5 நிறுவனம் ‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. இந்த உரிமையினை ரூ.52 […]