Browsing category

Tamil News

மகா கலைஞனே விரைவில் மீண்டு வா: பாரதிராஜாவுக்காக வைரமுத்து பதிவு..

இயக்குநர் இமயம் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாரதிராஜா தற்போது நலமாக உள்ளார் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். ‘அவருடன் இருந்து கண்காணித்து வருகிறோம், அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது எங்கள் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, அவரது உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் மீண்டும் வரும் சர்ப்பிரைஸ் நடிகர்..

நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த மகன் அர்ஜுனை காவல்துறை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் சுட்டுக் கொன்றுவிடுவதாக படம் முடிந்து விடுவது தெரிந்ததே. இந்நிலையில் உருவாகும் ‘ஜெயிலர்-2’ படத்தில் அர்ஜுன் கேரக்டரில் மீண்டும் பார்க்கலாமா என வசந்த் ரவியிடம் கேள்விகள் கேட்பது தொடர்கிறது. இதனால், யார் கேட்டாலும் முதலில் பதில் சொல்லாமல் இருந்த வசந்த் ரவி, தற்போது ‘சர்ப்பிரைஸ்’ என்று மட்டும் சொல்கிறார். ‘சர்ப்பிரைஸ்’ எனும் இந்த ஒரு வார்த்தையை வைத்து […]

திறமை- தன்னம்பிக்கை பற்றி நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, வர்ஷினி பேச்சு..

* இந்திய அளவில் வரவேற்பு பெற்ற ‘கே.ஜி.எப்.’ படத்தில் யாஷ் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’, தெலுங்கில் நானியுடன் ‘ஹிட்-3′ படங்களில் நடித்தார். சமீபத்தில் ‘தெலுசு கதா’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டியிடம் ‘நீங்கள் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், குறைவான படங்களே நடித்துள்ளீர்கள். ஏன் இந்த இடைவெளி?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘உண்மை தான். கடந்த 10 ஆண்டுகளில் குறைவான படங்களே நடித்திருக்கிறேன். ஆனாலும் […]

‘ஜனநாயகன்’ காலைக்காட்சிக்கு அனுமதியில்லை: விஜய் ரசிகர்கள் அதிருப்தி..

மலேசியாவில் நடந்த ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் 75 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். இதையடுத்து ஒரு தமிழ்ப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அதிக அளவில் ஆட்கள் கூடியதாக மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்திருக்கிறது ஜனநாயகன் நிகழ்ச்சி என கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் துவங்கும் என அதை கேரளாவில் விநியோகம் செய்திருக்கும் எஸ்.எஸ்.ஆர். என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகாலை காட்சி இல்லாமல் […]

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. இதற்காக பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுவந்தார். அதில் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவின. ஆனால், தற்போது ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு […]

விமான நிலையத்தில் விஜய் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு..

விஜய் தனது கடைசிப்படமாக நடித்துள்ள ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் கதைக்களத்தை தழுவி தமிழுக்கேற்ற மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சுமார் 75 பேர் திரண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலேசிய நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஜய், இரவு சென்னை திரும்பினார். அவரை வரவேற்க […]

உண்மையை சொன்ன மீனா,ரோகினி எடுத்த முடிவு,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

உண்மையை மீனா சொல்ல,ரோகினி முடிவு எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி கதை சொல்லி முடிக்க மீனா கதை சூப்பராக இருப்பதாக சொல்லி பாராட்டுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் ரோகினி வந்து மனோஜ் ரொம்ப கடன் தொல்லைல மாட்டிகிட்டு இருக்காரு நீங்க ஒரு அஞ்சு லட்சம் கொடுத்து உதவினீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்ல உடனே பார்வதி நேராக சிவனிடம் […]

கல்யாணத்திடம் பேசிய நந்தினி, உச்சகட்ட கோபத்தில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா இருவரும் சுந்தரவல்லியை பாராட்டி பேசுகின்றனர். இது என்ன இருக்கு இதுக்கு மேல நான் ஆட போற ஆட்டத்தை அவங்களால தாங்க முடியாது […]

‘ஜனநாயகன்’ படம் பார்த்து தணிக்கை குழு நடவடிக்கை..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கின. இதனைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் கூறியிருக்கிறார்கள். இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது படக்குழு. முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிப்பதை குறைக்கச் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணிகள் இன்றுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி இரவு […]

திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?: பிரபாஸ் விளக்கம்..

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் இந்திய அளவில் வரவேற்பு பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. பின்னர், இது வதந்தி என தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக […]