Browsing category

Tamil News

மக்களுக்கு கருத்தைச் சொல்ல ஹீரோவாக இருக்கணுமா? இல்ல வில்லனாக இருக்கணுமா?.. அருண் விஜய் பதில்.!!

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் அருண் விஜய். இவர் சமீபத்தில் இட்லி கடை என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இந்த படத்தை தனுஷ் இயக்கி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ரெட்ட தல என்ற படத்தில் நடித்துள்ளார். கரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தி இதானி,தன்யா ரவிச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அருண் விஜய் இடம் நீங்கள் ஹீரோவாகவும் வில்லனாகவும் […]

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கொடுக்காதது குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. குஷ்பு கொடுத்த பதில்.!!

ஜனநாயகன் படத்தின் சென்சார் கொடுக்காதது குறித்து குஷ்புவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் விமான […]

ரஜினியின் 173-வது படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நெகிழ்ச்சிப் பதிவு..

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் வெற்றியால் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் ‘ரஜினி 173’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்பது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், தனக்குக் கிடைத்த வாய்ப்பு குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ‘ஒரு சிற்றூரில் ஒரு சின்னஞ்சிறு பையன் இருந்தான். அவனது பெரிய கனவு என்றாவது ஒரு நாள் ‘சூப்பர் ஸ்டாரை’ […]

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி இணைந்து நடித்த ‘காந்தி டாக்ஸ்’ படம் ரிலீஸ்..

விஜய்சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் தற்போது, இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் பேசும் படம் போன்று இந்த படத்தை மவுன படமாக எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]

ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக, ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கமல் தயாரிக்க அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால், இப்படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. ரஜினியின் 173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை […]

சூரி நடிக்கும் ‘மண்டாடி’ பட ஆக்சன் காட்சி: 60 நாள் படப்பிடிப்பு..

‘மாமன்’ படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்​கும் படம் ‘மண்​டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்​கும் இப்படம், படகுப் ​பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது. ஆர்​.எஸ்​.இன்ஃ​போடெயின்​மென்ட் சார்பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கும் இப்​படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார், சாச்​சனா நமி​தாஸ் ஆகியோர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். எஸ்.ஆர்.க​திர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். தமிழ், தெலுங்​கு, இந்தி மொழிகளில் உரு​வாகிறது. இந்​நிலையில் இப்படம் 2026-ம் ஆண்டு கோடை​யில் […]

‘ஜனநாயகன்’ பட டிரெய்லர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கெளதம் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். வருகிற 9-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கியுள்ளன. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது […]

மோகன்லால், மம்முட்டி இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ படப்பிடிப்பு நிறைவு..

மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து ‘பேட்ரியாட்’ என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இவர்கள் இணைந்து நடிக்கும் 8-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை ‘டேக் ஆப்’, ‘மாலிக்’ போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி.அனில் குமார் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் இசையமைப்பாளராக சுஷின் ஸ்யாம் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் […]

தலைவர் 173 படத்தின் கதை இது தானா?வெளியான சூப்பர் தகவல்.!!

தலைவர் 173 படத்தின் கதைகளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் சுந்தர் சி […]

75 முதல் 80% கேக்குறாங்க..ஜனநாயகன் படம் குறித்து பேசிய திருப்பூர் சுப்பிரமணியன்..!

ஜனநாயகன் படத்தின் திரையரங்க உரிமை குறித்து திருப்பூர் சுப்ரமணியன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் மேலும் பூஜா ஹெக்டே,மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜய்யின் கடைசி படம் […]