கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் மீண்டும் இணையும் ‘சேயோன்’ மூவி..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘சேயோன்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமான கிராமத்து இளைஞன் தோற்றத்தில் கையில் அரிவாளுடன் காணப்படுகிறார். அவரைச் சுற்றி மயில்தோகை விரிந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘சேயோன்’ என்பது தமிழ்க் கடவுள் முருகனைக் குறிக்கும் பெயராக இருப்பதால், […]