Browsing category

Tamil Reviews

சாத்தியமற்றதை சாத்தியம் ஆக்கியதா இன்றைய ‘பராசக்தி’: சினிமா விமர்சனம்

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார் தேசியக்கவி பாரதி. ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. மேலும் தமிழுக்காக உழைத்து, தமிழை உயர்த்தி தன்னுயிர் நீத்தவர்களும் உண்டு. தமிழை வைத்து பிழைத்துக் கொழுப்பவரும் உண்டு. உலகில் மொழிவெறி என்பது அன்றும் இன்றும் தொடர்கிறது. தாய்மொழி முக்கியம். அதைத் தாண்டிய மொழி கற்பது தவறா சரியா என்பதும் எழுச்சிக் குரலாய் எழுவது தொடர்கிறது. இதில், அரசியல் […]

‘சிறை’ படம் பார்வையாளர்களை ஈர்த்ததா?: திரை விமர்சனம்

பொதுவாக, மனித வாழ்வில் யாரும் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. அவ்வப்போது நேரிடும் மன அழுத்தங்களால் தீதும் நன்றும் நிகழ்ந்து விடுகிறது. எச்சூழலிலும் நிலைமாறாத கருணைமனம் காலத்தால் போற்றப்படுகின்றது. இதனை நுட்பமாய் உணர்ந்து உயர்தலே மனித தர்மம். அனைத்து மறையும் வலியுறுத்தும் வாழ்வியல். இப்ப ‘சிறை’ திரைப்படம் பற்றிய விஷயத்திற்கு வருவோம்.. விக்ரம் பிரபுவின் 25-வது திரைப்படமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாக இயக்குநர் வெற்றிமாறனிடம் பணிபுரிந்த சுரேஷ் ராஜகுமாரி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் தமிழ் […]

‘பைசன் காளமாடன்’ களத்தில் வென்றானா? தோற்றானா?: திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பணியாற்றியவர் ராம். இவரிடம் பணியாற்றிய மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படம் இயக்கி கவனம் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ உதயநிதி-வடிவேலு நடிப்பில் ‘மாமன்னன்’ மற்றும் ‘வாழை’ என தனித்த முத்திரையை தொடர்ந்தார். பணம்- புகழைக் கடந்து என் மக்களுக்காக நல்லவை சொல்ல விழைகிறேன் என்ற முனைப்பில் இவர் உருவாக்கி தற்போது வெளியாகி இருக்கிறது ‘பைசன் காளமாடன்’ அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மணத்தி கணேசன் […]

தனுஷின் ‘இட்லி கடை’ ருசிக்கிறதா சலிக்கிறதா?: திரை விமர்சனம்

இட்லிக்கும் பரோட்டோவுக்கும் வந்த பகை தான்ங்க கதைக்களம், இதில், தனுஷின் மச்சானாக அருண் விஜய் கர்வம், ஈகோ என மிரட்டியிருக்கிறார். தொழில் போட்டியால் சமுத்திரக்கனி தனுசை ஒழிக்க நினைக்கிறார். இறுதியில் இட்லி கடை தொடர்ந்ததா, வாடிக்கையாளரை கவர்ந்ததா என்பதே மீதிக்கதை.. முதல் பாதி நெகிழ வைக்கிறது. மறுபாதி சலிக்க வைக்கிறது. அம்மா அப்பாவை நினைத்து உருகும் நிகழ்வில், தனுஷ் வழக்கம்போல நடிப்பை மெய்சிலிர்க்க வைக்கிறார். நித்யா மேனன் வெகுளி நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு உயிரூட்டி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் […]

சமூகப் பேரழிவை சீறும் ‘மதராஸி’ மூவி எப்படி?: திரை விமர்சனம்

சூர்யாவுக்கு கஜினி படமும், விஜய்க்கு துப்பாக்கி படமும் கொடுத்த முருகதாஸின் இயக்கத்தில் மிரட்டலாய் களமிறங்கி இருக்கிறது ‘மதராஸி’. இப்படம் குறித்த விமர்சனம் பார்ப்போம்.. தனது குடும்பத்தை இழந்த சிவகார்த்திகேயன் மனநோயால் பாதிக்கப்படுகிறார். யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என காப்பாற்றுகிறார். இவரது மனதை அறிந்த ருக்மணி உளமார காதலிக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு மனநிலை சரியாகிறது. மற்றவர்களை காப்பாற்றும் எண்ணத்தை விட்டு விடுகிறார். இதனால், ருக்மணி பிரிந்து விட, சிவகார்த்திகேயன் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். இச்சூழலில், […]

பழிவாங்கும் படலத்தில் ‘கூலி’ தேவா தீர்த்துக் கட்டினாரா?: திரை விமர்சனம்

யாருமேயில்லாத ஒரு கூலித்தொழிலாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவனுக்கு தன் தங்கையையும் மணமுடித்து வைத்த ஒரு நல்ல மனுஷன், திடீரென எதிராளிகளால் செத்துப் போயிட்டா; அந்தக் கயவர்களை என்னங்க பண்ணலாம்? இதான்ங்க படத்தோட கதைக்கரு. விசாகப்பட்டினம் துறைமுகத்தில், தங்கக்கடத்தலில் ஈடுபடுகிறார் (நாகர்ஜுனா) சைமன். இவருக்கு வலதுகையாக இருப்பவர் (சவுபின் சாகிர்) தயாள். போலீசுக்கு தகவல் சொல்பவர்களைக் கொன்று, உடல்களை அப்புறப்படுத்துவதில் இவர்களுக்கு சிக்கல் நேர்கிறது. மேலும், தனது கேங்ஸ்டர் கூட்டத்தில் போலீஸ் உளவாளி இருப்பதும் சைமனுக்கு தெரிய வருகிறது. […]

‘ஹவுஸ்மேட்ஸ்’ திரை விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘ஹவுஸ்மேட்ஸ்’ படம் பற்றிக் காண்போம்.. பொதுவாக, ரூம் மேட்ஸ் என்பது தெரியும். அதென்ன ஹவுஸ்மேட்ஸ் என்பதை இப்படம் பொருத்தமாய் விவரிக்கிறது. அதாவது, புதுமணத் தம்பதிகளான தர்ஷன், அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கி வசிக்கின்றனர். அச்சூழலில், வீட்டுக்குள் விசித்திரமான அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேறுவதை உணர்கின்றார்கள். பின்னர், இந்த வீட்டிற்குள் காளி வெங்கட்- வினோதினி தம்பதியர் தங்கள் மகனுடன் வாழ்ந்து வருவது […]

குடும்பச் சண்டைகளுக்கு விவாகரத்து தீர்வாகுமா?: ‘தலைவன் தலைவி’ திரை விமர்சனம்

இருமனம் ஒருமனமாகி நறுமணம் கமழும் நிகழ்வு தானே திருமணம். இந்த இனிய இல்லறத்திற்குள் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு தானே. இதற்கெல்லாம் மனம் முறிந்து, மணமுறிவுக்காக நீதிமன்றம் நாடுவது முறைதானா?. இதுதான்ங்க படத்தோட கதைக்கரு. அதாவது, ஹோட்டல் நடத்திவரும் ‘ஆகாசவீரன்’ விஜய் சேதுபதிக்கும் ‘பேரரசி’ நித்யாமேனனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. இச்சூழலில், விஜய் சேதுபதியின் குடும்பத்தினர் ரவுடிகள் என நித்யா வீட்டில் தெரியவர, திருமணம் நிறுத்தப்படுகிறது. இதனையும் மீறி விஜய் சேதுபதியை நித்யா திருமணம் செய்கிறாள். பின்னர், ஹோட்டலின் […]

மனதுக்குள் சிறகடிக்கிறதா? கிறங்கடிக்கிறதா?: ‘பறந்து போ’ திரை விமர்சனம்

குழலினிது, யாழினிது என்பது போல மழலையின் மொழியும் இனிதுதானே. தூறல்களாய் வருடும் மழையின் சிலிர்ப்பு தானே. மழலையின் சேட்டைகளும் மயிலிறகின் தொடுகை அல்லவா. அத்தகு புன்னகைப் படைப்புதான் இது. அதாவது, குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்கும் இடையே நடக்கிற உரையாடல்தான் ‘பறந்து போ’ திரைப்படம். கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களால் கவனம் இருந்த இயக்குநர் ராம், இப்படத்தையும் வடிவமைத்திருக்கிறார் இனி இப்படம் குறித்து காண்போம்… கோகுல் (சிவா), குளோரி (கிரேஸ் ஆண்டனி) […]

திரை ஆளுமையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்ததா ‘தக் லைஃப்’?: திரை விமர்சனம்

எதிரி என்பவன் வேற்றுக் கிரகத்திலிருந்து குதிக்கமாட்டான். கூட இருக்கிறவன் தான் எதிரியாவான். மொகலாயர் ஆட்சியிலிருந்து இப்ப வரைக்கும் அதிகாரப்போட்டியென வந்துவிட்டால், அப்பாயென்ன மகனென்ன அண்ணனென்ன தம்பியென்ன; யுத்தக்குருதி தெறிக்கிறது இயல்புதானே. அதாவது சக்திவேலுவும் அமரனும் அகோரமாய் மோதுகிற-பாசம் குழைந்த அதிகார போர்க்களம்தான்ங்க ‘தக் லைஃப்’ படத்தோட ஒன் லைன். டெல்லியில், கேங்ஸ்டர் ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) போலீஸ் இடையே பரபரக்கும் துப்பாக்கிச் சண்டையில், தவறுதலாக பேப்பர் போடுபவர் இறக்கிறார். இதனால், அவரது மகன் அமரன் (சிம்பு) ஆதரவின்றி […]