Browsing category

Tamil Cinema News

ஜீவா நடிக்கும் தகப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. போஸ்டரிலேயே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களமும், கிராமத்து மண்வாசனையும் பிரதிபலிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ரா. வெங்கட் இயக்கும் இந்த திரைப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா–மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான குடும்பக் கதையாக […]

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி!

‘சிங்கம் 2’, ‘சர்தார்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக இணையும் புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகவுள்ளது. கார்த்தியின் அனைவராலும் விரும்பப்படும் நடிப்பு பரிமாணத்தை மீண்டும் திரையில் கொண்டுவரும் முயற்சியாகவும் இப்படம் பார்க்கப்படுகிறது. ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, […]

நடிகர் கிருஷ்ணாவின் 25வது படம் மர்டர் இன் டவுன்!

நடிகர் கிருஷ்ணா குலசேகரனின் 25வது திரைப்படமான ‘மர்டர் இன் டவுன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான புலனாய்வு கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த க்ரைம் த்ரில்லர், கிருஷ்ணாவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மனு மந்த்ரா கிரியேஷன்ஸ், ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் மற்றும் யாத்ரா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடுத்தர வயது காவல்துறை அதிகாரி […]

Volmart Films உரிமையாளர் சாய் பாபா காசோலை மோசடி வழக்கில் தண்டனை

Volmart Films உரிமையாளர் சாய் பாபா மீது காசோலை திரும்பிய வழக்கு… ஒரு ஆண்டு சிறைத்தண்டனை! சென்னை எழும்பூர் அல்லிக்குளம் XXXV பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், Volmart Films நிறுவனத்தின் உரிமையாளர் சி. சாய் பாபா தொடர்பான காசோலை திரும்பிய (Negotiable Instruments Act, Section 138) வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற பதிவுகளின்படி, புகார்தாரருக்கு வழங்கப்பட்ட ₹40,01,600 மதிப்பிலான காசோலை “Account Closed” என்ற காரணத்தால் வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து, சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டும் தொகை […]

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என நம்பிக்கை தெரிவித்த சூர்யா!

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை திருவிழாவாக மாற்றினர். இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகை […]

நண்பர்கள் தினத்தில் நெகிழவைத்த அல்லு அர்ஜுன்

திரையுலகில் வெற்றி பெற்ற பிறகு பலரின் வாழ்க்கையும், உறவுகளும் மாறுவது இயல்பான ஒன்று. ஆனால், வெற்றியின் உச்சிக்குச் சென்ற பிறகும் தன்னுடன் பயணித்தவர்களை மறக்காமல், அவர்களையும் முன்னேற்றும் மனிதர்கள் மிகச் சிலரே. அந்தப் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, அல்லு அர்ஜுனின் வாழ்க்கையில் நட்புக்கு அவர் அளித்து வரும் முக்கியத்துவம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. “உண்மையான வெற்றி என்பது தனியாக உச்சத்தை அடைவது அல்ல; உங்களுடன் பயணித்த நண்பர்களையும் அந்த […]

பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்தின் முதல் பாடல்!

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘அட்ராசிட்டி’ (Atrocity) பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான பாடலின் புரோமோ நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி […]

‘வதந்தி சீசன் 2’ பத்திரிகையாளர் சந்திப்பு… ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்!

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் வெளியாகவுள்ள ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் ஊடகங்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் சசிகுமார், நடிகைகள் அபர்ணா தாஸ், அனகா மருதோரா, யஷ்வந்த், விவேக் பிரசன்னா, இயக்குநர் ஆண்ட்ரூ […]

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் தயாரிக்க, விவிஒய் என்டர்டெயின்மென்ட் சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரித்துள்ள இப்படம், சர்தார் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ளது. வெளியாகியுள்ள டீசரில் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்கள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஸ்பை த்ரில்லர் பாணியிலான […]

வி.ஜே.சித்துவின் ‘டயங்கரம்’ படத்திம் பட பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. டிஜிட்டல் உலகில் பிரபலமானவரும், டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவருமான வி.ஜே. சித்து, இப்படத்தின் கதாநாயகனாக நடித்ததுடன், இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், […]