பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ பட வெளியீட்டு தேதி மாற்றம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ (Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய காலதாமதமானதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளில் படம் வெளியாகவில்லை. இறுதியாக ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைந்து […]