Browsing category

News

Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ‘ஸ்வீட்ஹார்ட் ‘ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் […]

குறுகிய கால தயாரிப்பில், சிம்பு-சந்தானம் காம்போவில் புதிய படம்

சிம்பு நடிக்கவிருக்கும் 49-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. தற்போது, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். சந்தானம் நாயகனாக நடித்து வந்தாலும், அவரை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. இதனால், அவர் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பல பேட்டிகளில் கூறியிருந்தார் சந்தானம். தற்போது சிம்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க […]

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – ஸ்ரீகாந்த் ஓடெலா – சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘தி பாரடைஸ் ‘ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

நேச்சுரல் ஸ்டார்’ நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தி பாரடைஸ்’ எனும் திரைப்படத்திலிருந்து ரா ஸ்டேட்மெண்ட் எனும் பெயரில் பிரத்யேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடினமான மற்றும் காவிய வடிவிலான பயணத்தை உறுதியளிக்கிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் வெளியான தசரா திரைப்படம்- அவருடைய திரையுலக பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக இருந்தது. அவர் தன்னுடைய சௌகரியமான தளத்திலிருந்து விலகி, ஒரு கரடு முரடான கிராமிய கதாபாத்திரத்திற்கு மாறி இருக்கிறார். […]

இந்திய சினிமாவில் புதிய ரெக்கார்டு படைத்து நடிகர் பிரதீப் சாதனை

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது போல, குறும்படத்தில் தொடங்கிய ஆர்வம் இன்று சாதனைச் சமுத்திரமாகி இருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தவர்கள் பலரும் ஹீரோவாக நடித்தவரை பாராட்டி இருக்கிறார்கள். இயக்கிய தனக்கு பாராட்டு கிடைக்காததால், ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்து, முதலில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்க ‘கோமாளி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தான் இயக்கிய ‘அப்பா லாக்’ குறும்படத்தை ‘லவ் டுடே’ […]

ஒன்றையணா உதவி செஞ்சுட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க: இயக்குனர் செல்வராகவன் வாய்ஸ்

‘யார்கிட்டேயும் சொல்லாதீங்க, உங்க வேலையை செய்யுங்க, அமைதியா இருங்க’ என கூறியுள்ளார் செல்வராகவன். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் மீது சர்ச்சைகள் உண்டு. ஆனால், அவரது அண்ணன் செல்வராகவன் பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். நடிகை சோனியா அகர்வாலை விவாரத்து செய்த பின்னர், தன் துணை இயக்குனர் கீதாஞ்சலியை திருமணம் செய்து, 3 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தன் மனதில் எழும் கருத்துகளை வீடியோவாக வெளியிடுவது வழக்கம். […]

சினிமா உலகில் ஆஸ்கர் விருது ஏன், எதற்கு, யாரால் கொடுக்கப்படுகிறது தெரியுமா?

உலக சினிமாவில் உயரிய கௌரவமாக போற்றப்படுகிறது ஆஸ்கர் விருது. இது குறித்த வரலாற்றுக் குறிப்புகள் காண்போம்.. * திரைத்துறையில் துறையில் சிறந்த நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வரப்படுகிறது. * ஆஸ்கர் சிலையின் உயரம் மட்டும்13.5 இன்ச் (34.3 செமீ). இதன் எடை 3.866 கிலோ. * முதல் முறையாக 1928-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்ஸர் […]

சூர்யா 45 : புகைப்படத்துடன் தரமான அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி..!

சூர்யா 45 படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் shoot mode […]

புடவையில் இடுப்பைக்காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த […]

பச்சை நிற புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட இந்திரஜா.!!

பச்சை நிற புடவையில் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் இந்திரஜா ரோபோசங்கர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து வெளியேறினர் சமீபத்தில் […]

அஜித் 64 படத்தின் இயக்குனர் முன்னணி நடிகரா? முழு விவரம் இதோ.!!

அஜித் 64 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது. […]