Browsing category

News

ரூ.500 கோடியை கடந்து ‘சையாரா’ படம் மெகா வசூல் சாதனை..

பாலிவுட் பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள, ‘சையாரா’ என்ற காதல் திரைப்படம் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. இப்பட நடிகர்கள் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் சகோதரர் மகன். அனீத் பட்டா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜூலை 18-ம் தேதி வெளியான இப்படம் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மாபெரும் வசூல் சாதனையை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் […]

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் வெளியீடு தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில், தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, திரையரங்குகளுக்கு […]

மிருணாள் தாக்குருடன் தனுஷ் காதல்?: வைரலாகும் நிகழ்வு..

தனுஷ்-அமல்பால் இருவரும் காதலித்து வருவதாக முன்னதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகி நீர்த்துப்போனது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது மிருணாள் தாக்குரை தனுஷ் காதலித்து வருவதாக மும்பை ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும், மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், கடந்த ஆக.1-ம் தேதி மும்பையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். […]

சர்வதேச பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற தமிழ்ப்படம்..

கமர்ஷியல் கதைகள் ஒருபுறம் வருந்தாலும், விருதுகளுக்கான கதைகளும் வந்து அங்கீகாரம் பெறுகின்றன. அவ்வகையில், முன்னதாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’ படம் சர்வதேச பட விழாக்களில் பல விருதுகளை குவித்தது தெரிந்ததே இந்நிலையில் பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கிய படம், ‘பிஎம்டபிள்யூ 1991’. இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கிரீன் விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரித்துள்ள இந்தப் […]

மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம்..

கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு, மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ‘தக் லைஃப்’ படம் தோல்வியை தழுவியதால், தனது அடுத்த படத்தின் கதையை மெருக்கேற்றி வந்தார் மணிரத்னம். தற்போது நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்திருக்கிறார். காதல் கலந்த ஆக்‌ஷன் கதையாக இதனை உருவாக்கவுள்ளார் மணிரத்னம். இதில், துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணிபுரியவுள்ளார். […]

சிவகார்த்திகேயனுக்கு, வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய்யுள்ள ‘கூலி’ படம் வரும் 14-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, லோகேஷ் கனகராஜை நாயகனாக நடிக்க வைக்க பலரும் அணுகி வருகிறார்கள். இதில் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், மூன்று வருடங்களாக நிறைய நண்பர்கள் என்னை நடிக்க வைக்க அணுகிறார்கள். சமீபத்தில் கூட ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்க அணுகினார்கள். சுதா கொங்காரா […]

குடும்பம் மற்றும் சினிமாவை சமாளிப்பது எப்படி? சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..!

குடும்பம் மற்றும் சினிமாவை சமாளிப்பது எப்படி என பேசி உள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தின் மதராசி என்ற படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்துள்ளார். இரண்டு படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் நிகழ்ந்த பேட்டி […]

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட சுருதி ஹாசன்.!!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சுருதி ஹாசன். தமிழ் சினிமாவின் நடிகை மற்றும் பின்னணி பாடகி என இரண்டிலும் கலக்கி வருபவர் சுருதி ஹாசன். இவர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து 3, பூஜை, புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பிலும் வெளியாகியுள்ள கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். […]

துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

துல்கர் சல்மான் – ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 – #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. ‘நேச்சுரல் ஸ்டார் ‘ நானி கிளாப் அடித்து தொடங்கி வைக்க, வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. பன்முக திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி- தனித்துவம் மற்றும் […]