Browsing category

News

முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்.. உணர்ச்சிபூர்வமான தருணங்கள்.. கடைசி எபிசோட் இதோ.!!

இன்றோடு பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மயூ கிச்சனில் பாக்யாவிடம் நீங்க பெங்களூர் சுத்திப்பாக்க நிறைய இடம் இருக்கு நான் உங்களுக்கு சுத்தி காமிக்கிறேன் என்று சொல்ல நீ எனக்கு காமிக்கிறியா என்று கேட்க நான் ஒன்னும் சின்ன பொண்ணு மயூ கிடையாது இப்போ காலேஜ் போற என்று சொன்ன பாக்யாவும் சந்தோஷமாக சரிவர என சொல்லுகிறார் பிறகு ராதிகா […]

சூர்யா சொன்ன வார்த்தை, சிக்கினாரா மாதவி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீ வேணா எனக்கு ட்ரிம் பண்ணி விடு என சொல்ல, நந்தினியும் கத்தரிக்கோலை வாங்கி கட் பண்ணி விடுகிறார். இது மாதிரி இருக்கிறத […]

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு, முக்கிய அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த ‘கூலி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் தணிக்கைக்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. இதனால் பலரும் ஆச்சரியப்பட்டாலும், படக்குழுவினரோ அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ஏ சான்றிதழ் என்பதால் திரையரங்குகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பி.வி.ஆர் மற்றும் ஏஜிஎஸ் திரையரங்குகள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள பதிவில் ‘ஏ சான்றிதழ் படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வராமல் இருக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். ஏ சான்றிதழ் படங்களுக்கு செல்லும் பொழுது வயதை […]

ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகும் படம்..

பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகையாக வலம் வருகிறார் என்பது தெரிந்ததே. அந்நிலையில், அவர் ஷங்கரின் மகன் அர்ஜித் ’மதராஸி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அவ்வகையில், அப்பாவைப் போல இயக்குநராக ஆவார் எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழலில், தற்போது அவரை நாயகனாக அறிமுகமாக கதைகள் கேட்கப்பட்டது. பல முன்னணி இயக்குநர்களும் கதைகள் கூறினார்கள். இறுதியாக, அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரின் கதையில் அர்ஜித்தை ஹீரோவாக அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான பணிகள் நடைபெற்று […]

இந்தியில் பேசமாட்டேன்: நடிகை கஜோல் கோபம், வைரல் நிகழ்வு..

மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை கஜோல் மராத்தியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பேசினார். அவரிடம் நிருபர் ஒருவர் இந்தியில் பேசுமாறு கூறினார். இதனால், கோபமடைந்த கஜோல், ‘நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு புரியும்’ என்று கடுமையான தொனியில் கூறினார். இந்த வீடியோ வலைதளங்களில் உடனடியாக வைரலானது. கஜோலுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தரப்பும் பதிவிட்டு வருகின்றனர். ‘இந்தி வேண்டாம் என்று நினைப்பவர் இத்தனை வருடங்கள் எதற்காக இந்தி […]

மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்: ‘கிங்டம்’ படக்குழு அறிவிப்பு..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ’கிங்டம்’ படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில், தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் அவருடைய கட்சியினர் ‘கிங்டம்’ பேனர்களை கிழிக்கத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து படத்தினை தயாரித்துள்ள சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கிங்டம்’. […]

இந்தி திரையுலகில் ‘கூலி’ படத்துக்காக களமிறங்கிய அமீர்கான்..

சூப்பர் ஸ்டார் நடித்த ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படம் வரும் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமீர்கான். இந்தி தவிர்த்து இதர மொழிகளில் திரையரங்குகள் ஒப்பந்தம் தொடர்பாக ‘கூலி’ படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்து முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், இந்தியில் ‘வார் 2’ வெளியாவதால் அப்படத்துக்கே முன்னுரிமை வழங்கி வந்தார்கள். தற்போது ‘கூலி’ படத்துக்காக தாமாக முன்வந்து பி.வி.ஆர் […]

நான் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு காரணம் கமல்தான்: நடிகை ஊர்வசி ஓபன் டாக்..

மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’ படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஊர்வசி. அதனைத் தொடர்ந்து அவர் தெரிவித்த தகவல் வைரலாகி வருகிறது. அதில் தேசிய விருது தேர்வு, ஷாருக்கானுக்கு ஏன் விருது உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் எழுப்பியிருந்தார். மேலும், கமல்ஹாசன் தான் தன்னை மலையாளத்தில் நடிக்குமாறு கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘மரியாதைக்குரிய நண்பர் கமல். அப்படியொரு நட்பு கிடைப்பது சினிமாவில் பெரிய விஷயம். திறமைக்கு மதிப்புக் கொடுப்பவர் அவர். ஊர்வசி ஒரு […]

ஓட்டேரி நரி ஹேர் ஸ்டைலில் சூப்பர் சிங்கர் சிவாங்கி.. போட்டோஸ் இதோ.!!

ஓட்டேரி நரி ஹேர் ஸ்டைலில் சூப்பர் சிங்கர் சிவாங்கி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் இருந்து கோமாளியாகவும் பங்கேற்று இருந்த இவர் சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை செய்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது சன் டிவியில் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

தலைவா ஃபேஸ் பாக்கணும்.. ரசிகரின் வார்த்தைக்கு ரஜினிகாந்த் செய்த செயல்..!

தலைவா ஃபேஸ் பாக்கணும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கேட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ்,உபேந்திரா, அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் […]