Browsing category

News

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி..

இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர். ‘கேங்ஸ்டர்’ கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களை கவராமல் போனது. இதையடுத்து, மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. […]

‘ஆர்யன்’ படத்தின் க்ளைமாக்ஸை மாற்றியது ஏன்?: விஷ்ணு விஷால் விளக்கம்..

விஷ்ணு விஷால், செல்வ​ராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ​நாத், மானசா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஆர்​யன்’ படத்தை பிரவீன் கே. இயக்​கி​யுள்​ளார். சமீபத்தில் வெளி​யான இப்​படம் வரவேற்​பைப் பெற்​றுள்​ளதை அடுத்து நன்றி தெரிவிக்​கும் விழா சென்னை​யில் நடந்​தது. படக்​குழுவினர் கலந்​து​கொண்ட விழா​வில் படத்​தின் தயாரிப்​பாள​ரும் ஹீரோவு​மான விஷ்ணு விஷால் கூறும்​போது, ‘ஆர்​யன் படத்தை முதலில் 2023-ம் ஆண்டு வெளி​யிடத் திட்டமிட்​டிருந்​தோம். தாமதம் காரண​மாகப் படத்தை இன்​னும் சிறப்பாக உரு​வாக்க முடிந்​தது. இயக்​குநர் பிர​வீன் ஒரு புதுமையான, துணிச்சலான படத்தை உரு​வாக்​கி​யுள்​ளார். […]

ஸ்ரீ காந்த்-ஷாம் நடிப்பில் உருவான ‘தி டிரெய்னர்’ படத்தின் கதை..

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ட்ரெய்ன்’ என்பது தெரிந்ததே. இவ்வகையில் ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீகாந்த், ஷாம் நடித்துள்ள த்ரில்லர் படம், ‘தி டிரெய்னர்’. இப்படத்தில் ஜூனியர் எம். ஜி. ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே. ஆர்.எம்.ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். டிரான்ஸ் இந்தியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நீலா […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் செம வைரல்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ முதல் பாடல் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. இதனையடுத்து ‘ஜனநாயகன்’ படத்துடைய முதல் பாடல் நாளை சனிக்கிழமை 8-ந்தேதி தேதி முதல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையில், இப்படத்துடைய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தில் மக்களுக்கு இடையில் முறுக்கு மீசை மற்றும் கண்ணாடியுடன் மிரட்டலான லுக்கில் விஜய் […]

நீங்கள் செய்வது பத்திரிகை தொழிலே அல்ல: நடிகை கவுரி கிஷன் ஆவேசம்..

புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இப்படம் தொடர்பான நிகழ்வில் நிருபர் ஒருவர் ‘உங்கள் எடை என்ன?’ என்று நடிகை கவுரி கிஷனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அது குறித்து கேள்வி எழுப்பிய கவுரி […]

துல்கர் சல்மான் நேரில் ஆஜராக, நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்..

நடிகர் துல்கர் சல்மான் ‘லோகா’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ‘காந்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் உள்ள பிரபலமான பிரியாணி அரிசியின் விளம்பர தூதராக துல்கர் சல்மான் இருக்கிறார். அவர் மீது, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கேட்டரிங் நிறுவன ஊழியர் பி.என். ஜெயராஜன் என்பவர், நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘திருமண விழாவுக்காக, குறிப்பிட்ட பிராண்டின் […]

அஜித் 64 விடுங்க.. அஜித் 65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் 65 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தையும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் 65 படம் […]

கவர்ச்சி உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் யாஷிகா..!

கவர்ச்சி உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா. கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா,கழுகு2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பெஸ்டி, போன்ற பல, படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.மேலும் ஜோடி நம்பர் ஒன் சீசன் 10 நிகழ்ச்சியில் குழு தலைவராகவும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் […]

ஜனநாயகன் படம் குறித்து வெளியான சுவாரசிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படம் குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே,பாபி தியோல் ,நரேன், கௌதம் மேனன், மமீதா பைஜூ, பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது […]

மேனேஜர் பதவியை ரிசைன் பண்ண விக்கல்ஸ் விக்ரம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விக்கல்ஸ் விக்ரம் அவரது மேனேஜர் பதவியை பிக் பாஸிடம் சொல்லிவிட்டு இழக்கிறார். உடனே பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கண்கலங்கி நான் ரிசைன் பண்ணிருக்கேன அதுக்கு […]