Browsing category

Latest News

ரூ.404 கோடி சொத்து.. ரூ.370 கோடி வங்கி சேமிப்பு: வேட்புமனுவில் அதிரடி காட்டிய விஜய்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்காக பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அதிகாரப்பூர்வ சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு: அசையும் மற்றும் அசையா சொத்துகள்: விஜய்யின் மொத்த அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.404.58 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிக் கணக்குகளில் மட்டும் சுமார் ரூ.370 கோடிக்கும் அதிகமாக சேமிப்பு மற்றும் வைப்புத் தொகையாக வைத்துள்ளார். குறிப்பாக, சாலிகிராமம் […]

வில்லிவாக்கம் பரப்புரை ரத்து: ஏமாற்றத்தில் தவெக பெண் தொண்டர்கள் – பனையூர் விரைந்தார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது தேர்தல் பரப்புரையின் முதல் நாளிலேயே வில்லிவாக்கம் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வை திடீரென ரத்து செய்தது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரப்புரைக்காகத் திரண்டிருந்த தவெக பெண் தொண்டர்கள், விஜய்யைக் காண நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு நேரடியாகப் பனையூர் இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால் உற்சாகத்துடன் வந்திருந்த பெண் தொண்டர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களா அல்லது தவிர்க்க […]

மிரட்டலான ஆக்‌ஷனுடன் வெளியான லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ பட டிரெய்லர்!

சென்னை: ‘தி லெஜெண்ட்’ படத்தைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் அதிரடியான ஆக்‌ஷன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், முழுநீள ஆக்‌ஷன் கதையம்சம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற படத்தின் இசை வெளியீடு மற்றும் பிரீ-ரிலீஸ் விழாவில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டது.   டிரெய்லர் சிறப்பம்சங்கள்: இந்த டிரெய்லரில் லெஜண்ட் சரவணனின் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தந்தை – மகள் பாசப் பிணைப்பை […]

நடிகர் பிரகாஷ் ராஜ் இல்லத்தில் சோகம்: அவரது தாயார் சுவர்ணலதா காலமானார்!

சென்னை: பிரபல பன்மொழி நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா (86), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இந்தத் துயரச் செய்தி திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது மறைவு குறித்து அறிந்த திரையுலகைச் சேர்ந்த பலரும், பிரகாஷ் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் […]

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ பட வெளியீட்டு தேதி மாற்றம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ (Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய காலதாமதமானதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளில் படம் வெளியாகவில்லை. இறுதியாக ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைந்து […]

ஜூலையில் வெளியாகிறதா விஜய்யின் ‘ஜனநாயகன்’? தணிக்கை குழு சிக்கல்களுக்கு இடையே புதிய தகவல்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கை குழுவின் கெடுபிடிகளால் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் இப்படம், வரும் ஜூலை மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தணிக்கை குழு சர்ச்சை: இப்படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, மத்திய தணிக்கை வாரியம் மறு ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து படக்குழு நீதிமன்றம் சென்றது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, மார்ச் […]

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கப்போகும் பிரபல நடிகை! இணையத்தில் வைரலாகும் தகவல்.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இவரது அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. புதிய படத்தின் அப்டேட்: தற்போது சிவகார்த்திகேயன், ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தங்கையாக மாளவிகா மனோஜ்: […]

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தயாரிப்பாளர் புகார்: ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் இயக்குனர் சங்கத்தில் மனு!

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் மீது ‘மதராஸி’ படத் தயாரிப்பாளர் அதிரடி புகார் ஒன்றை அளித்துள்ளார். படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ரூ. 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். புகாரின் பின்னணி: கடந்த ஆண்டு வெளியான ‘மதராஸி’ மற்றும் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘சிக்கந்தர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், ‘மதராஸி’ படத்தின் தயாரிப்பாளர், ஏ.ஆர்.முருகதாஸ் […]

‘துரந்தர் 2’ படத்தை வெளுத்து வாங்கிய வெற்றிமாறன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன், அண்மையில் நடைபெற்ற ஒரு விழாவில் ‘புரொப்பகண்டா’ (Propaganda) திரைப்படங்கள் குறித்துத் தனது காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மறைமுகத் தாக்குதல்: சமீபத்தில் வெளியான ‘துரந்தர் 2’ (Dhurandhar 2) திரைப்படத்தை மறைமுகமாக விமர்சித்துப் பேசிய வெற்றிமாறன், இத்தகைய பிரச்சாரப் படங்கள் மக்களின் நினைவாற்றலையே மாற்றும் சக்தி கொண்டவை என்று குற்றம் சாட்டியுள்ளார். பணமதிப்பிழப்பு குறித்த பேச்சு: “பணமதிப்பிழப்பு (Demonetization) நடவடிக்கையின் போது 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்று […]

அரசியலில் குதித்த சுந்தர்.சி! மதுரையில் வேட்பாளராகப் போட்டி – கூட்டணி விவரம் இதோ!

அரசியலில் களமிறங்கிய இயக்குனர் சுந்தர்.சி… மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்! தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சுந்தர்.சி (சிதம்பரம் பிள்ளையின் மகன்) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் அரங்கில் இறங்கியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சி (Puthiya Needhi Katchi) சார்பில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் […]