Browsing category

Latest News

முத்து கொடுத்த ஷாக், மனோஜ் சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து சொன்ன வார்த்தைக்கு மனோஜ் பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை டிஸ்சார்ஜ் செய்து ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வருகின்றனர். விஜயா மற்றும் ரோகினி இருவரும் அவரைப் பிடித்துக் கொண்டு நடக்க எனக்கு தான் கண்ணு தெரியுதுல்ல நானே நடந்துக்கிறேன் என்று சொல்ல ரெண்டு நாளைக்கு பாடி பெய்ன் இருக்கும் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு வாங்க என்று அழைத்து […]

மோகன்லால் நடிக்கும் ‘L2 : எம்புரான்’ படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட நடிகர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் – ஆசிர்வாத் சினிமாஸ் கூட்டணியில் தயாரான’ L2 : எம்புரான் ‘ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ L 2: எம்புரான்’ எனும் திரைப்படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஜான் விக் சாப்டர் 3 ‘ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் ஃபிளின் நடித்திருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு […]

தனுஷ் இயக்கத்தில், ‘தல’ அஜித் நடிக்கும் புதிய பட அறிவிப்பு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிரபுதேவா-விஜய் கூட்டணிபோல, தனுஷ்-அஜித் கூட்டணி உருவாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘ராயன்’ பட வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் தனது அக்கா மகன் பவிஷை நாயகனாக அறிமுகப்படுத்தி உள்ளார். இப்படம், விமர்சனம் மற்றும் கலெக்‌ஷன் ரீதியாக திருப்தியில்லை. இப்படம் ரிலீஸான வந்த ‘டிராகன்’ படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, தனுஷ் தான் இயக்கியிருக்கும் ‘இட்லி கடை’ படம் மூலம் நம்பிக்கையாக உள்ளார். இப்படத்தை […]

“ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா. ரஞ்சித் – அஸ்வத் மாரிமுத்து – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் […]

‘ஜகஜால கில்லாடி’ பட விவகாரம்: சிவாஜி கணேசன் வீடு ஜப்தி-ஐகோர்ட் உத்தரவு

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுவிஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த […]

Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ‘ஸ்வீட்ஹார்ட் ‘ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் […]

குறுகிய கால தயாரிப்பில், சிம்பு-சந்தானம் காம்போவில் புதிய படம்

சிம்பு நடிக்கவிருக்கும் 49-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. தற்போது, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். சந்தானம் நாயகனாக நடித்து வந்தாலும், அவரை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. இதனால், அவர் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பல பேட்டிகளில் கூறியிருந்தார் சந்தானம். தற்போது சிம்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க […]

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – ஸ்ரீகாந்த் ஓடெலா – சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘தி பாரடைஸ் ‘ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

நேச்சுரல் ஸ்டார்’ நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தி பாரடைஸ்’ எனும் திரைப்படத்திலிருந்து ரா ஸ்டேட்மெண்ட் எனும் பெயரில் பிரத்யேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடினமான மற்றும் காவிய வடிவிலான பயணத்தை உறுதியளிக்கிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் வெளியான தசரா திரைப்படம்- அவருடைய திரையுலக பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக இருந்தது. அவர் தன்னுடைய சௌகரியமான தளத்திலிருந்து விலகி, ஒரு கரடு முரடான கிராமிய கதாபாத்திரத்திற்கு மாறி இருக்கிறார். […]

இந்திய சினிமாவில் புதிய ரெக்கார்டு படைத்து நடிகர் பிரதீப் சாதனை

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது போல, குறும்படத்தில் தொடங்கிய ஆர்வம் இன்று சாதனைச் சமுத்திரமாகி இருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தவர்கள் பலரும் ஹீரோவாக நடித்தவரை பாராட்டி இருக்கிறார்கள். இயக்கிய தனக்கு பாராட்டு கிடைக்காததால், ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்து, முதலில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்க ‘கோமாளி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தான் இயக்கிய ‘அப்பா லாக்’ குறும்படத்தை ‘லவ் டுடே’ […]

ஒன்றையணா உதவி செஞ்சுட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க: இயக்குனர் செல்வராகவன் வாய்ஸ்

‘யார்கிட்டேயும் சொல்லாதீங்க, உங்க வேலையை செய்யுங்க, அமைதியா இருங்க’ என கூறியுள்ளார் செல்வராகவன். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் மீது சர்ச்சைகள் உண்டு. ஆனால், அவரது அண்ணன் செல்வராகவன் பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். நடிகை சோனியா அகர்வாலை விவாரத்து செய்த பின்னர், தன் துணை இயக்குனர் கீதாஞ்சலியை திருமணம் செய்து, 3 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தன் மனதில் எழும் கருத்துகளை வீடியோவாக வெளியிடுவது வழக்கம். […]