Browsing category

Latest News

அனிருத்தை கடத்தப் போகிறேன்: விஜய் தேவரகொண்டா சுவாரஸ்ய தகவல்..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இறுதிகட்டப் பணிகள் இருந்ததால், விஜய் தேவரகொண்டா மட்டுமே கலந்து கொண்டார். இதில் அவர் பேசும்போது, ‘என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ படம் நாளை ஜூலை 31-ந்தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற […]

அமீர்கானின் புதிய முயற்சி: ‘சித்தாரே ஜமீன் பர்’ படம் யூ-டியூப்பில் ரிலீஸ்..

அமீர்கான், ஜெனிலியா நடிப்பில் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் வெளியான படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. அமீர்கான் தயாரித்து வெளியிட்ட இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தை யூ-டியூப் தளத்தில் அமீர்கான் வெளியிடவுள்ளார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில், இப்படத்தை பார்க்க முடியும். இந்த புதிய முயற்சி, உலகளாவிய அளவில் திரைப்பட விநியோகத்தில் ஒரு புதிய வழிகாட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை […]

நடிகர் பிரகாஷ்ராஜிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை..

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கியுள்ள விஜய் தேவரகொண்டா, ராணா, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. ED அனுப்பிய சம்மனில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தேதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவ்வகையில், முதலில் ராணா ஜூலை 23-ந் தேதி அன்று […]

தவறாகப் புரிந்து செய்தியாக பரப்புவது நியாயமற்றது: லட்சுமி ராமகிருஷ்ணன் ஃபீல்..

விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி 6’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், ‘முன்பு கமலை காதலித்து வந்ததாகவும், அதை அவரிடம் சொல்ல முயன்றபோது நீங்கள் தங்கை மாதிரி என சொல்லி அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டார். இதை வைத்து பலரும் செய்திகள் வெளியிட்டார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்தப் பேச்சு வைரலாக பரவியது. இந்தப் பேச்சு தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில், ‘நான் 16 வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18 வயதில் திருமணம் செய்தேன். […]

இயக்குநர் பாண்டிராஜ் பேச்சுக்கு, சூர்யா ரசிகர்கள் எதிர்ப்பு..

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த விஜய் சேதுபதி படம் என்ற சாதனையை படைக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக, பாண்டிராஜ் தெரிவிக்கையில், ‘சூர்யா சாருக்கு மட்டும் ப்ளாப் படம் கொடுத்துவிட்டு, மற்ற நாயகர்கள் அனைவருக்கும் ஹிட் கொடுக்கிறீர்கள் என்கிறார்கள். கொரோனா காலத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு தான் 3 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்படத்துக்கு தான் அதிகமாக உழைத்தேன், மக்களிடையே வரவேற்பு பெறாதது நம் கையில் […]

நடிகை ரம்யாவுக்கு ஆபாச தகவல்கள்: 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..

கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்திக்கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றார். இப்போது ஜாமீனில் இருக்கிறார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதுபற்றி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சாதாரண குடிமகனுக்கு உச்ச நீதிமன்றம்தான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்’ என கூறியிருந்தார். இதனால், தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, ஆபாசத் தகவல்களை […]

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவிற்கு திருமணமா? புகைப்படங்கள் இதோ.!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் திருமணமான புகைப்படங்கள் போன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. பிறகு தான் அது AI செய்யப்பட்ட புகைப்படங்கள் […]

பட்டுப் புடவையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பட்டுப் புடவையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணை யாரும் பத்மினியும், திருடன் போலீஸ்,காக்கா முட்டை, ஆறாது சினம்,தர்மதுரை, குற்றமே தண்டனை, முப்பரிமாணம்,ஜெமினி கணேசன் சுருளிராஜனும், வடசென்னை,கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படம் வடசென்னை படத்துடன் தொடர்புடைய கதையாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் சமுத்திரகனி ,கிஷோர், ஆண்ட்ரியா போன்ற […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வரும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]