Browsing author

Suresh

எஸ்.ஜே.சூர்யா செம பிஸி: ‘கில்லர்’ படத்தின் இயக்கமும், ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிப்பும்..

வாலி, குஷி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த சில வருடங்களாக நடிகராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார். தற்போது, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக, 2015-ம் ஆண்டு ‘இசை’ படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இப்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் […]

உற்சாகப்படுத்தும் விஷயங்களில் மட்டுமே எனது கவனம்: சமந்தா ஓபன் டாக்..

சமந்தா தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்தார். படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.  சமீபமாக அதிகமான படங்களில் அவர் நடிப்பதில்லை, மேலும் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். உடற்பயிற்சி, வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்டவற்றில் அதிகப்படியான நேரத்தினை செலவழித்து வருகிறார். இது தொடர்பாக சமந்தா தெரிவிக்கையில், ‘இப்போது என்னை உற்சாகப்படுத்தும் விஷயங்களை மட்டுமே செய்து வருகிறேன். அது சினிமா, உடற்பயிற்சி எதுவாக இருந்தாலும் சரி தான். முந்தைய காலங்களில் பல படங்களில் தொடர்ச்சியாக […]

‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவுக்கு, சிவகார்த்திகேயன் பாராட்டு..

கடந்த ஜூன் 6-ம் தேதி வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டு பல்வேறு பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். அவ்வகையில், சிவகார்த்திகேயனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் இருக்கும் புகைப்படங்கள் ‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். மேலும், சிவகார்த்திகேயன் பாராட்டுக்கு நன்றி எனவும் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். ‘சிவகார்த்திகேயன் அவர்கள் மெட்ராஸ் மேட்னி படக்குழுவினருடன் கலந்துரையாடி பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அன்பும் நன்றியும்’ என […]

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் ‘ஆர்யன்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தினை அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது. சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு ‘ஆர்யன்’ படத்தினை திரையிட்டு காட்டியுள்ளார் விஷ்ணு விஷால். அவர்கள் அனைவருமே படத்தை மிகவும் பாராட்டியிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ப்ரவீன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் உள்பட பலர் விஷ்ணு விஷால் உடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக விஷ்ணு […]

ராஜமௌலி-மகேஷ்பாபு படத்தின் போஸ்டர் வெளியீடு எப்போது?

ராஜமௌலி இயக்கத்தில் மபேஷ்பாபு நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி, ஒரிசாவில் நிறைவடைந்துள்ளது. சமீபத்தில், படத்தின் முக்கிய காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. தற்போது, அடுத்த கட்ட படப்பிடிப்பு நைரோபியில் நடத்த படக்குழு தயாராகி வருகிறது. மகேஷ் பாபுவும், பிரியங்கா சோப்ராவும் கென்யாவின் நைரோபியை அடைந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி அன்று மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்கு, ரசிகர்கள் படத்தின் முதல் பார்வை அல்லது க்ளிம்ப்ஸ் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால், வெளியாகவில்லை. இந்நிலையில், […]

சூர்யாவுடன் மீண்டும் ஏன் இணையவில்லை?: வதந்திகளுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி..

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் இணைந்தார் சூர்யா. ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அதேபோல், கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படம் பூஜையுடன் கைவிடப்பட்டது. பின்னர், சுதா கொங்கராவின் இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தைத் தொடர்ந்து நடிப்பதாக இருந்த ‘புறநானூறு’ படத்திலிருந்தும் விலகினார். தற்போது அந்த படத்தில் ‘பராசக்தி’ என்ற பெயரில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ […]

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம், தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமா? நஷ்டமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், லோகேஷ் கனராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், இந்த விமர்சனங்களால், இப்படத்தின் வசூலை எந்தளவிலும் பாதிக்கவில்லை. படம் வெளியான முதல் நாளிலேயே 151 கோடி வசூலித்திருந்தது. அதனைத்தொடர்ந்து நான்கு நாட்களில் 400 கோடி வசூலை குவித்தது. தமிழ் சினிமாவின் அதிவேகமாக 400 கோடி வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை கூலி நிகழ்த்தியது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், சுமார் 430 […]

‘நம்பர் கேம்’ ஒரு போதும் என் தந்தையை பாதிக்காது: ஸ்ருதிஹாசன் விளக்கம்..

சினிமாவில் எதிர்பாராது நிகழும் வெற்றி-தோல்விக்களில் கமலின் மனநிலை என்ன? என்பது குறித்து ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ‘நாயகன்’ படத்துக்கு பிறகு, இருபெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’ பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம், எதிர்பாராத தோல்வியை தழுவியது. இந்நிலையில், கடந்த வாரம் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் […]

7 மாதங்களுக்கு பிறகு, மீண்டு வரும் டைகர்: மம்முட்டிக்கு, மஞ்சு வாரியர் வரவேற்பு..

தமிழ் சினிமாவில் அழகன், மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்க வா, தளபதி போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி என்பது தெரிந்ததே. தற்போது மம்முட்டி, மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 7 மாதத்துக்கு முன், இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, மம்முட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால், படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் […]

அட்லி-அல்லு அர்ஜுன் இணையும் படத்திற்கு, தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட்..

அட்லி இயக்கும் படத்தின் தகவல்கள் பற்றிக் காண்போம்.. ‘புஷ்பா 2’ வெற்றிப்படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். மேலும், ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் […]