Browsing author

Suresh

அபர்ணாவின் மனதை கவர, அப்பா வங்கமொழியை கற்றார்: ஸ்ருதிஹாசன் தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஷ் இயக்கி வெளியான ‘கூலி’ படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். அப்போது, கமல்ஹாசன் வங்க மொழி அறிந்தவர் என்றும் சத்யராஜ் கூற, அதற்கு ஸ்ருதிஹாசன் பதில் அளித்தார். ‘அப்பா வங்க மொழி ஏன் கற்றுக் கொண்டார் என்றால், அப்போது அவருக்கு அபர்ணா சென் மீது காதல் இருந்தது. அவரது மனதை கவரும் வகையில் வங்க […]

விஜய்காந்த் மற்றும் விஜய் பற்றி, விஷால் அரசியல் பேச்சு..

விஜயகாந்த்தின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ‘மகுடம்’ படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. விஷால் படக்குழுவினருடன் இணைந்து விஜயகாந்த் படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விஷால் பேசும்போது, ‘மறக்க முடியாத ஒரு நபர், நடிகர், அரசியல்வாதி. எந்த துறைக்கு சென்றாலும், அதில் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். தான் சாப்பிடும் உணவு தான் படப்பிடிப்பு தளத்தின் கடைசி ஊழியர் வரை சாப்பிட வேண்டும் என்று கொண்டுவந்தவர் விஜயகாந்த் சார். அவர் இன்று இல்லை […]

‘அழகர் யானை’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் விளக்கம்..

‘அழகர் யானை’ பட பூஜை முடிந்து, தற்போது படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதன் கதைக்களம் பற்றி இங்கே காண்போம்.. ’மரகதக்காடு’ படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் அடுத்து இயக்கும் படம் ‘அழகர் யானை’. விஜய் டிவி புகழ், ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். குறிப்பாக, 80 அடி உயர யானை ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. ’அழகர் யானை’ குறித்து இயக்குநர் மங்களேஷ்வரன், தெரிவிக்கையில், ‘இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை […]

ரூ.600 கோடியை எட்டுமா ‘கூலி’ திரைப்படம்?: படக்குழு எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படத்தை ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம், கலவையான விமர்சனங்களால் இப்படத்தின் 2-ம் நாள் வசூலே இறக்கம் கண்டு ஆச்சரியம் அளித்தது. இதனால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் தடுமாறத் தொடங்கியது. தற்போது இப்படம் உலகளாவிய வசூலில் 500 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என படக்குழுவினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், 600 கோடி ரூபாயை எட்டும் என்ற சூழல் தற்போது நிலவுகிறது. […]

நான் யார் என்று என்னை உணர வைத்தவர் கெனிஷா: ரவிமோகன் பெருமிதம்..

ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா மற்றும் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர். இதில் தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்பை ரவி மோகன் வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, ‘இந்த விழா நடைபெறுவதற்கு முழு காரணம் கெனிஷா மட்டுமே. இதை முழுக்க முழுக்க எனக்காக மட்டுமே அவர் செய்தார். எனக்கு […]

பிரபுதேவா-வடிவேலு இணையும் புதிய படத்தின் அப்டேட்ஸ்..

பார்த்திபன், சுந்தர்.சி, அர்ஜுன், பிரசாந்த் ஆகியோருடன் இணைந்த வடிவேலு காமெடி காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. அவ்வகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கோலகலமாக நடைபெற்றது. இதில் லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் உள்பட பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழ்த் […]

நான் ரசித்துப் பார்த்த தமிழ்ப்படம்: சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்..

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இணையத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் அடிக்கடி படங்கள் பார்ப்பீர்களா? சமீபத்தில் நீங்கள் ரசித்த படம் எது?’என்று கேட்டார். அதற்கு சச்சின் ‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் படம் பார்ப்பேன். சமீபத்தில் பார்த்து ரசித்த படங்கள் ’3பிஹெச்கே’ மற்றும் ’ஆட்டா தம்பாய்ச் நாய்’ என்றார். இந்தப் பதிலால் ‘3 பிஹெச்கே’ படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, ‘பலமுறை டைப் செய்து, என்ன […]

விஜய் சாரை மிஸ் பண்றோம்: அனிருத் ஃபீல்..

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அரசியல் பேசும் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இசையமைத்துள்ள அனிருத், ‘இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் அறிவித்துள்ளதால் அவரை படங்களில் இருந்து மிஸ் பண்ண உள்ளதாக அனிருத் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், லியோ’ படத்தின் ட்ராக்குகளை தனித்தனியாக வெளியிட்டு விட்டோம். அதனால் தான் மொத்தமாக OST ஆக வெளியிடவில்லை. அனைத்தையும் சேர்த்து விரைவில் வெளியிட்டு விடலாம். ’ஜனநாயகன்’ […]

சச்சின், டோனியையே விமர்சனம் செய்யும்போது இவனென்ன: சிவகார்த்திகேயன் ஃபீலிங்ஸ்..

சிவகார்த்திகேயன் கேரியர் ‘அமரன்’ படத்திற்கு பிறகு மாஸாகி விட்டது. தற்போது மதராஸி, பராசக்தி என முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருகிறார். அவ்வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் செம்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார். இதுவே நாளடைவில் இணையத்தில் கிண்டலாக மாறியது. ‘கூலி’ வெளியான அன்று கூட பலரும் சிவகார்த்திகேயன், ரஜினியை அழைத்து […]

ஷாருக்கான் நடிக்கவிருந்த கதையில் இவன்: சிவகார்த்திகேயன் பெருமிதம்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை வென்று காட்டியவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரது திரைப் பயணம் ஏற்ற இறக்கம் கொண்டதே. அவ்வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ‘எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் வரும் மிரர் ஷாட் எனக்கு […]