Browsing author

Suresh

தனுஷ் நடித்த த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியீடு..

பன்முகத் திறமையாளர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘தேரே இஸ்க் மெயின்’ பாலிவுட் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனிடையே வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தெரிவிக்கையில், பிப்ரவரியில் தனுஷ் – விக்னேஷ் ராஜா படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பணிகள் ஜூலையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதன் முழுப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. எடிட்டிங் பணிகள் அனைத்தையும் […]

திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ், மிஷ்கினுடன் இணையும் புதிய படம்..

தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். காதல் திருமணத்திற்கு பிறகு தற்போது, இவர் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில், இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த புதிய படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. […]

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ பட அப்டேட்ஸ்..

கோமாளி, லவ்டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன் என்பது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’. இப்படத்தின் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால், இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் ‘ட்யூட்’ உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என தெரிகிறது. கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ட்யூட்’ […]

‘எஸ்டிஆர்-49’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்ஸ்: ரசிகர்கள் அதிருப்தி..

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கடந்த வாரம் எஸ்டிஆர் 49 ப்ரொமோ வரும் 4-ந்தேதி வெளியாகும் என எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு இந்த முன்னோட்ட வீடியோவுக்காக சிம்பு டப்பிங் செய்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர். இந்நிலையில் வெற்றிமாறன், சிம்பு படத்துக்கான ப்ரொமோ குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு. இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் தள பதிவில், ‘சிம்பு ரசிகர்களின் அன்பு […]

‘காந்தாரா சாப்டர்-1’ படத்திற்கு பிரபல இயக்குநர் பாராட்டு..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ரிலீசானது ‘காந்தாரா சாப்டர் 1’. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள இப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது ‘காந்தாரா 1’. இதனிடையில் திரையுலகை சார்ந்த பிரபலங்களும் படத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தினை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், ‘இந்திய […]

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்தின் தகவல்கள்..

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் நடிப்பில வெளியான படம் ‘டிராகன் ‘. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் […]

பிரித்விராஜ்-தருண் மூர்த்தி கூட்டணியில் ‘ஆபரேஷன் கம்போடியா’ திரைப்பட அப்டேட்ஸ்..

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகர் பிருத்விராஜ். இவர் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக அங்கீகாரம் பெற்றார். குறிப்பாக, மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான எம்புரான் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. அண்மையில், இவர் நடிப்பில் வெளியான இந்திப் படமான சர்சாமின் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மோகன்லாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, ‘துடரும்’ […]

‘இட்லி கடை’ படத்திற்கு எதிராக ‘ஹாஸ்டேக்’ டிரெண்டிங்..

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கவனித்து வந்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தற்போது அவரின் மகன் உதயநிதி கவனித்து கொள்கின்றார். அரசியல் களத்தில் தற்போது விஜய் vs உதயநிதி என்பது போல தான் போய்க்கொண்டு இருக்கின்றது. விஜய் திமுக கட்சியை தனது கூட்டத்தில் விமர்சிப்பதும் பதிலுக்கு உதயநிதி ஸ்டாலின் பேசுவதும் இப்படியே இந்த விவாதம் போய்க்கொண்டு இருக்கின்றது. மேலும் இரு அரசியல் கட்சி தொண்டர்களுக்கும் […]

அனைத்து தயாரிப்பாளர்களும் வெட்கப்பட வேண்டும்: ராம் கோபால் வர்மா பதிவு..

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இந்தப் படம் காந்தாரா நிகழ்வுகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ரிஷப்பைத் தவிர, இப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம் மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டில் சத்யா, ரங்கீலா போன்ற பல படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா, இப்படத்தை பாராட்டியுள்ளார். ‘ரிஷப்பின் உழைப்பைப் பார்த்து இந்தியாவின் அனைத்து […]

என் ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: அஜித் வாய்ஸ்..

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது. இதனிடையே அஜித் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே, விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் முக்கியத்துவத்தை தரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய வேண்டும். ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸை ஒரு தளமாகப் பயன்படுத்த விரும்புகிறேன். சர்வதேச அளவில் நிறைய விருதுகள் வழங்கப்பட்டு விழாக்கள் […]