Browsing author

Suresh

விஜய்யின் அறிமுகப் பாடல் நாளை வெளியீடு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் நெரிசல் […]

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி..

இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர். ‘கேங்ஸ்டர்’ கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களை கவராமல் போனது. இதையடுத்து, மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. […]

‘ஆர்யன்’ படத்தின் க்ளைமாக்ஸை மாற்றியது ஏன்?: விஷ்ணு விஷால் விளக்கம்..

விஷ்ணு விஷால், செல்வ​ராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ​நாத், மானசா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஆர்​யன்’ படத்தை பிரவீன் கே. இயக்​கி​யுள்​ளார். சமீபத்தில் வெளி​யான இப்​படம் வரவேற்​பைப் பெற்​றுள்​ளதை அடுத்து நன்றி தெரிவிக்​கும் விழா சென்னை​யில் நடந்​தது. படக்​குழுவினர் கலந்​து​கொண்ட விழா​வில் படத்​தின் தயாரிப்​பாள​ரும் ஹீரோவு​மான விஷ்ணு விஷால் கூறும்​போது, ‘ஆர்​யன் படத்தை முதலில் 2023-ம் ஆண்டு வெளி​யிடத் திட்டமிட்​டிருந்​தோம். தாமதம் காரண​மாகப் படத்தை இன்​னும் சிறப்பாக உரு​வாக்க முடிந்​தது. இயக்​குநர் பிர​வீன் ஒரு புதுமையான, துணிச்சலான படத்தை உரு​வாக்​கி​யுள்​ளார். […]

ஸ்ரீ காந்த்-ஷாம் நடிப்பில் உருவான ‘தி டிரெய்னர்’ படத்தின் கதை..

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ட்ரெய்ன்’ என்பது தெரிந்ததே. இவ்வகையில் ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீகாந்த், ஷாம் நடித்துள்ள த்ரில்லர் படம், ‘தி டிரெய்னர்’. இப்படத்தில் ஜூனியர் எம். ஜி. ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே. ஆர்.எம்.ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். டிரான்ஸ் இந்தியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நீலா […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் செம வைரல்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ முதல் பாடல் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. இதனையடுத்து ‘ஜனநாயகன்’ படத்துடைய முதல் பாடல் நாளை சனிக்கிழமை 8-ந்தேதி தேதி முதல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையில், இப்படத்துடைய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தில் மக்களுக்கு இடையில் முறுக்கு மீசை மற்றும் கண்ணாடியுடன் மிரட்டலான லுக்கில் விஜய் […]

நீங்கள் செய்வது பத்திரிகை தொழிலே அல்ல: நடிகை கவுரி கிஷன் ஆவேசம்..

புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இப்படம் தொடர்பான நிகழ்வில் நிருபர் ஒருவர் ‘உங்கள் எடை என்ன?’ என்று நடிகை கவுரி கிஷனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அது குறித்து கேள்வி எழுப்பிய கவுரி […]

துல்கர் சல்மான் நேரில் ஆஜராக, நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்..

நடிகர் துல்கர் சல்மான் ‘லோகா’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ‘காந்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் உள்ள பிரபலமான பிரியாணி அரிசியின் விளம்பர தூதராக துல்கர் சல்மான் இருக்கிறார். அவர் மீது, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கேட்டரிங் நிறுவன ஊழியர் பி.என். ஜெயராஜன் என்பவர், நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘திருமண விழாவுக்காக, குறிப்பிட்ட பிராண்டின் […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம்: ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்..

அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படங்கள் களம் இறங்குகின்றன. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் எஸ்கே உடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். ரவிமோகன் வில்லனாக வருகிறார். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, […]

ராஜமவுலி-மகேஷ்பாபு இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, எப்போது தெரியுமா?

ராஜமவுலி இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வரவேற்பு பெற்று வருவது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை எக்ஸ் தள உரையாடல் மூலம் தொடங்கியிருக்கிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாராகி வரும் பெரும் பொருட்செலவைக் கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பெயர், மகேஷ் பாபு உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எதையுமே படக்குழு […]

விஜய்யை தொடர்ந்து, தனுஷ்க்கு ஜோடியாகிறார் பூஜா ஹெக்டே..

ரஜினி நடித்து வெளியான ‘கூலி’ படத்தில் ஒரே பாடலில் ஆட்டம் போட்டு கவனம் ஈர்த்தவர் ‘மோனிகா’ பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடந்து பூஜா நடிக்கவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. ‘போர்த்தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். […]