Browsing author

Suresh

நெகட்டிவ் ரோலில் மம்முட்டி நடிக்கும் ‘களம் காவல்’ படத்தின் அப்டேட்ஸ்..

துல்கர் சல்கான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் ‘காந்தா’ படத்தில் நடித்தார் துல்கர் சல்மான். இந்த படம் இன்று ரிலீஸாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையே நடைபெறும் ஈகோ பற்றி இப்படம் சித்தரிக்கிறது. குறிப்பாக, இப்படத்தில் துல்கரின் சிறந்த நடிப்பு பாராட்டுகளை குவித்திருக்கிறது. இந்நிலையில், இவரது தந்தையான மம்முட்டி நடித்த ‘களம் காவல்’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது. குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை […]

ஹாரர் காமெடியில் உருவான ‘ரஜினி கேங்’ படத்தின் அப்டேட்ஸ்..

சிறு பட்ஜெட் படங்கள், சில நேரம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து விடுவதுண்டு. அந்த நம்பிக்கையில் சிறு பட்ஜெட் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவ்வகையில் ‘ரஜினி கேங்’ படம் பற்றிப் பார்ப்போம்.. ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, பிஸ்தா, உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’. இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா […]

‘காந்தா’ படத்துக்கு தடை கோரிய வழக்கு அடிப்படை ஆதாரமற்றது: ராணா பேச்சு..

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ திரைப்படம் நாளை 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படம் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ராணா. ‘காந்தா’ […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதற்கு காரணம் என்ன?

‘தலைவர்-173’ திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டது. இது பற்றிய விவரம் காண்போம்.. கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குவதாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக தற்போது இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலக ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சுந்தர்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், கனத்த இதயத்துடன் ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகிக் கொள்வது என்ற […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சிக்கல்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. இதன் தமிழக உரிமை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இப்படத்தின் உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெற்றிருந்தார். தற்போது, அவர் கூறிய மாதிரி பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் தவிர்த்து தமிழக உரிமையினை யாருக்கு வழங்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் படக்குழு இறங்கியிருக்கிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ பாணியில் ஒவ்வொரு […]

தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் அப்டேட்ஸ்..

தனுஷ் இயக்கத்தில் பவிஷ் நாயகனாக அறிமுகமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தனுஷின் அக்கா மகன் பவிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் படப்பூஜையில் தொடங்கியது. மகேஷ் ராஜேந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் பவிஷ் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்துக்கு ‘லவ் ஓ லவ்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். இதனை ஜி.வி.பிரகாஷ் தனது […]

ராஜமவுலி இயக்கும் படத்தில், பிரியங்கா சோப்ராவின் லுக் வெளியீடு..

இந்திய அளவில் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் அறிமுக விழா ஹைதராபாத்தில் விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தில், நாயகியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அவர் மண்டாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீண்ட வருடங்கள் கழித்து இந்திய படங்களுக்கு பிரியங்கா சோப்ரா திரும்பியிருப்பதால், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழாவுக்காக […]

அனுராக் காஷ்யப்-சங்கீதா நடிக்கும் ‘அன்கில்-123’ படத்தின் கதை..

அன்கில்-123 என்ற படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, அதர்வா நடித்த ‘100’ உள்பட சில படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘அன்கில்_123’. மனோதத்துவ த்ரில்லர் படமான இதில், அனுராக் கஷ்யப் முக்கிய கதாபாத்திரத்திலும் சங்கீதா உணர்ச்சிகரமான கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் […]

அருள்நிதி நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் அப்டேட்ஸ்..

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ படம் வரவேற்பு பெற்றது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அருள்நிதி கவனம் செலுத்துகிறார். அவ்வகையில், அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். பேஷன் […]

நடிகை அபிராமியின் பறக்கும் முத்தம்; யாருக்கு தெரியுமா?

‘ஐபிஎல்-இந்தியன் பெனல் லா’ என்ற படம் வருகிற 28-ந்தேதி திரைக்கு வருகிறது. கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தில், நாயகனாக டி.டி.எப்.வாசன் நடித்துள்ளார். மேலும் கிஷோர், அபிராமி, குஷிதா, சிங்கம்புலி, ஹரீஸ்பெரடி, ஆடுகளம் நரேன், ஜான்விஜய், போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் டி.டி.எப். வாசன் பேசியதாவது, ‘இது என்னுடைய முதல் படம். நான் கூச்ச சுபாவம் உள்ள பையன். […]