Browsing author

Suresh

எனது குடும்பத்தில் டிஜிட்டல் கைது நடந்துள்ளது: நாகார்ஜுனா பரபரப்பு பேச்சு..

ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் ஸ்டைலிஸ்ட் வில்லனாக நாகார்ஜுனா நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், தற்போது ஐதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தலைமையில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, எஸ்.எஸ். ராஜமவுலி, தில் ராஜு, சுரேஷ்பாபு போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், பேசிய நாகார்ஜுனா, ‘தனது குடும்பத்தில் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு 2 நாட்கள் டிஜிட்டல் கைதுக்கு ஆளானதாக கூறினார். காவல்துறையினரை அணுகினால் பிரச்சினை […]

ருக்மணி வசந்தை தொடர்ந்து, அதிதி ராவும் எச்சரிக்கைப் பதிவு..

நடிகை ருக்மணி வசந்த் ‘காந்தாரா: சேப்டர்-1’ என்ற படத்தின் மூலம் நேஷனல் க்ரஷ் என்கிற அளவில் ஈர்க்கப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் ‘தனது பெயரில் இணையத்தில் ஃபேக் ஐடி தொடங்கப்பட்டு உள்ளதாக சைபர் க்ரைமில் புகார் செய்து, ஓர் இளம்பெண் கண்டறியப்பட்டார். அதுபோல், இதோ ஒரு நிகழ்வு.. காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் அதிதி ராவ் ஹைதாரி. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், நடிகர் சித்தார்த்தைக் […]

ராஜமவுலி சர்ச்சைப் பேச்சு; விளக்கம் தருவாரோ?

பாகுபலி, ஆர்​ஆர்​ஆர் படங்களின் மாபெரும் வெற்​றிக்​குப் பிறகு, மகேஷ்​பாபு நடிக்​கும் ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. மகேஷ்பாபு​வின் கேரக்டரை ஹனுமனை நினை​வூட்​டும் வகையில் வடிவமைத்துள்​ள​தாக ராஜமவுலி​யின் தந்தை விஜயேந்​திர பிர​சாத் கூறி​யிருந்​தார். இதற்​கிடையே பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற கதாபாத்​திரத்​தி​லும் பிருத்​வி ராஜ் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்​கின்​றனர். அவர்​களின் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யிடப்​பட்ட நிலையில் படத்​தில் டைட்​டில் டீஸர், ஹைதரா​பாத்தில் நடந்த ‘குளோப் ட்ராட்​டர்’ நிகழ்​வில் வெளியிடப்பட்​டது. படத்தில் மகேஷ்​பாபு, ருத்ரா […]

ஷ்ரேயா நடனமாடிய ‘கனகா’ பாடல், வைரல்..

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ என்ற ஒரே பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு.. ‘கோடியில் ஒருவன்’ உள்பட சில படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் ‘மெட்ரோ’ படத்தை இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 90-களில் நடக்கும் கதையான இது, மதுரை பின்னணியில் உருவாகியுள்ளது. தமிழ், […]

ராமர் கெட்அப்பில் மகேஷ்பாபுவை பார்த்து வியந்துபோனேன்: ராஜமவுலி வாய்ஸ்..

‘பாகுபலி’ ஆர்.ஆர்.ஆர். படங்களின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி என்பது தெரிந்ததே. தற்போது மகேஷ்பாபுவுடன் இணைந்து உருவாகும்’ படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில், காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர். […]

சித்தார்த் நடிக்கும் ‘ரவுடி அண்ட் கோ’ படக்கதை குறித்து இயக்குநர் பேச்சு..

‘சித்தா’ படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த தொடர், கார்கில் போர் பற்றிய வரலாற்றுக் கதையாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் சித்​தார்த், ராஷி கன்னா ஜோடி​யாக நடித்​துள்ள நகைச்சுவை படத்​துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்​ஸ்​ஸி, பிராங்க்​ஸ்​டர் ராகுல், வெற்றி மணி, சார்​லஸ் வினோத் ஆகியோர் நடித்​துள்ளனர். வம்சி வில்லனாக நடித்துள்ளார். இதை ‘டக்​கர்’ படத்தை […]

25 ஆண்டுகளுக்கு பிறகு, பிரபுதேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் ‘மூன்வாக்’ பட அப்டேட்ஸ்..

ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவா நடனமாடிய ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து பிரபுதேவா ‘காதலன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி கவனம் ஈர்த்தார். அவ்வகையில் அப்படத்தில் இடம்பெற்ற ‘முக்காப்புலா’ உள்பட அனைத்துப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தது நினைவுகூரத்தக்கது. மேலும் ‘மிஸ்டர் ரோமியோ’ படப் பாடல்களும் ஈர்த்தது. இந்நிலையில், பிரபுதேவாவும் ஏ.ஆர்.ரகுமானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மனோஜ் என்.எஸ்.இயக்கும் இப்படத்தில் […]

காதல் பற்றி தனுஷ்-கீர்த்தி சனோன் கருத்து: எது சரி? நெட்டிசன்ஸ் விவாதம்..

கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் தனுஷ். அவ்வகையில், உருவான ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. ஆனந்த்.எல்.ராய் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் நாயகியான கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இது காதலும் காதல் சார்ந்த மோதலும் கலந்த கதையாகும். இந்தப் படம் குறித்து தனுஷ் கூறும்போது, […]

‘ரஜினி-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகல் ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ’தலைவர் 173’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக சுந்தர்.சி உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. எதனால் விலகினார் என்பதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. மேலும், இணையத்தில் பலரும் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டார்கள். இதனிடையே டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன். ரஜினியின் 173-வது படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் என்பதால், அவரிடம் அந்த படத்தின் நிலை குறித்து பத்திரிகையாளர்கள் […]

இந்தியாவே எங்களைப் பார்த்து பெருமைப்படும்: மகேஷ்பாபு நெகிழ்ச்சி..

இந்திய அளவில் புகழ்பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இப்படத்துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது. இதில் மகேஷ் பாபு பேசும்போது, ‘இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் […]