Browsing author

Suresh

பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்கவில்லை: மஞ்சு வாரியார் ஆதங்கம்..

மலையாள சினிமாவில் பிரபல நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய மற்ற 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை மஞ்சு வாரியார் தெரிவிக்கையில், ‘நடிகையின் பாலியல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்த செயலை திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர். ஆகவே, உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே, சதித் திட்டம் […]

பணத்துக்காக அனிருத் இசையமைக்கிறார்: தமன் ஓபன் டாக்..

தமிழ்த்திரையில் தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடித்து வெளியான ‘3’ என்றஎன்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். ரஜினியின் வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கும் கமிட் ஆகி வருகிறார். அவ்வகையில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது. இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைப்பில் ‘வாரிசு, பிரின்ஸ், எனிமி, ரசவாதி’ ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது, அகண்டா 2, தி […]

அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கும் படத்தில் 2 ஹீரோயின்ஸ்?

அஜித்தின் AK64 படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இதற்கிடையே அவர் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர் இந்நிறுவனம் மூலம் சர்வதேச நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். துபாய், அபுதாபி, பார்சிலோனா உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்ற அவர், இப்போது மலேசியாவில் நடக்கும் பந்தயத்தில் […]

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘எல்ஐகே’ படம் ரிலீஸ் எப்போது?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள ‘எல்ஐகே’ படத்தில், சீமான், எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடித்து இந்தாண்டு வெளியான டிராகன், […]

ஆறுபடையப்பன் ரஜினி; ஏழு படையப்பன் டோனி: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ படம் ரீ ரிலீஸானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த இப்படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில், ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது, வெளிநாடுகளிலும் ரீ-ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர். மேலும், திரையுலகில் ரஜினி நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் […]

மலேசியாவில் அஜித்துடன் ஆதிக் சந்திப்பு; நடிகை ஸ்ரீலீலா ‘செல்ஃபி..’

அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வரும் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அப்போது அங்கு நடிகை ஸ்ரீலீலாவும் இருந்துள்ளார். அவர் அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் ஸ்ரீலீலா AK64 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறாரா? இல்லை வேறேதும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது அறிவிக்கப்படவில்லை. அதேபோல், லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகா மற்றும் ரெஜினா ஆகியோர் முக்கியமான ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இச்சூழலில், […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீசர் ரிலீஸ் எப்போது?

விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா வழக்கமாக சென்னையில் நடைபெறும் நிலையில், அவரின் கடைசிப் படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ இசை விழா மலேசியாசில் வரும் 27-ந்தேதி நடைபெறவுள்ளது. விழாவில் விஜய் படங்களின் பாடல்கள் பாடப்பட்டு, கான்செர்ட் ஒன்றும் நடைபெற இருக்கிறது. இப்படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தை தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் ஹெச்.வினோத் இய்க்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் […]

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா?

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ வெற்றிக்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்துள்ளதால், திரையில் அவரைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மேலும், இப்படத்தில் அதர்வா, ராணா, ஸ்ரீலீலா மற்றும் பாசில் ஜோசப் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படமாகவும் ‘பராசக்தி’ உருவாகியுள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவது சிங்கிளும் ரிலீசாக உள்ளது. […]

சாந்தனு நடிக்கும் ‘மெஜந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

திரையுலகில் வாரிசு நடிகர்கள் வருவது இயல்பு. அதில் தனித்திறமையுடன் நிற்பவர்கள் குறைவு. இது தொடர்பான தகவல் பார்ப்போம்.. கே.பாக்யராஜின் மகன் சாந்தனு ‘சக்கரைகட்டி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில படங்களில் தோல்வியும் சந்தித்து வந்தார். சாந்தனு நடிப்பில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படம் வரவேற்பை பெற்றது.பின்னர் வெளியான ‘இராவண கூட்டம்’ படமும் கவனத்தை ஈர்த்தது. தற்போது, பரத்மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் ஆகியோர் […]

’29’ என்ற படத்தின் கதைக்களம் என்ன?: இயக்குநர் ரத்னகுமார் விளக்கம்..

29 என்ற படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. ‘மேயாதமான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அடுத்து ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களை இயக்கினார். இப்போது அவர் இயக்​கியுள்ள படத்​துக்கு ‘29’ என்று டைட்​டில் வைத்துள்ளனர். இதில் விது, ப்ரீத்தி அஸ்​ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரே​யாஸ் பாத்​திமா உள்​பட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்​கம் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இந்​தப் படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்துள்​ளார். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்​ஸ், ஜீ ஸ்கு​வாட் நிறுவனங்​கள் சார்​பில் கார்த்​தி​கேயன், இயக்குநர் லோகேஷ் […]