Browsing author

Suresh

இதுவரை பார்க்காத ஆர்.ஜே.பாலாஜியை படத்தில் பார்க்கலாம்: ‘சொர்க்கவாசல்’ பட இயக்குனர் உறுதி..

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, ஹீரோவாகி, பின்னர் இயக்குனராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர், நடிகர் சூர்யா நடிப்பில் ‘சூர்யா 45’ படமும் இயக்கவிருக்கிறார். இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம், ‘சொர்க்க வாசல்’. இதில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், ஷரஃபுதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் […]

ரூ.600 கோடி பட்ஜெட்டில், சூர்யா நடிக்கும் அடுத்த படம் கர்ணா..?

ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்பது போல, சூர்யா நடிப்பில் மீண்டும் ஒரு வரலாற்றுப் படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிக் காண்போம்.. நடிகர் சூர்யா, கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக உழைத்து வெளிவந்த படம் கங்குவா, இப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சூர்யாவின் திரைவாழ்வில் மிகப்பெரிய தோல்விப் படமாக கங்குவா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர், நடிகர் சூர்யா நடிப்பில் […]

தன் மகளின் காதல் மற்றும் கர்ப்பம் குறித்து, கே.பாக்யராஜ் உணர்வுபூர்வமான தகவல்..

தன் மகள் சரண்யாவின் காதல் திருமணம் மற்றும் பிறந்த பேரன் பற்றி நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் உணர்ச்சிகரமான தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளுக்கு முன் மாதிரியாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஒற்றுமையாக வலம் வரும் தம்பதியர் கே.பாக்யராஜ்- பூர்ணிமா. இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளனர். சரண்யா, ‘பாரிஜாதம்’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். அதன் பின்னர் அவர் […]

இன்று நயன்தாரா பிறந்த நாளில் சமந்தாவின் விளம்பரப் படம் வைரல்

நயன்தாராவின் பிறந்த நாளான இன்று, சமந்தாவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த அழகிய நிகழ்வு பற்றி காண்போம். நயன்தாராவின் பிறந்த நாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் எப்படி இருக்கிறது என வலைதளங்களில் பேசுகிறார்கள். இந்த நாளில் யாரும் எதிர்பாராத விதமாக சமந்தாவின் பழைய வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. விளம்பரப் படத்தில் நடித்த சமந்தாவை பார்த்த அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த விளம்பர […]

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது, மணிரத்னமா? மாரிசெல்வராஜா?

ரஜினியின் அடுத்த தேர்வு மணிரத்னமா? மாரிசெல்வராஜா? என ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்க்கின்றனர். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஸாஹிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அநேகமாக அடுத்தாண்டு ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. […]

நயன்தாரா, தனுஷ் சண்டையா நமக்கு முக்கியமா? காயத்ரி ரகுராம் கருத்து

நயன்-தனுஷ் விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், நடிகை காய்த்ரி ரகுராம் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இது குறித்து பார்ப்போம்.. ‘நானும் ரவுடி தான்’ படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், அப்படத்தின் 3 வினாடி காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால், தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு, நயன்தாரா கடுமையாக விமர்சனம் செய்தும் கடிதம் வெளியிட்டதை அடுத்து தனுஷ், நயன்தாரா மோதல் முற்றியது. நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது, படத்தின் இயக்குனர் விக்னேஷ் […]

கங்குவா படத்திற்கு பாதிப்பு?: வரும் 22-ந்தேதி 6 படங்கள் ரிலீஸ்: முழு விவரம்..

வருகிற 22 ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.. ஜாலியோ ஜிம்கானா: நடிகர் பிரபுதேவா நடிப்பில், நவம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று ‘ஜாலியோ ஜம்கானா’. இயக்குனர் எஸ்.ஜே.சீனு என்பவர் இயக்கியுள்ளார். படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்க, கிங்ஸ்லி, அபிராமி, ஒய் ஜி மகேந்திரன், யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபுதேவா […]

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் பற்றி, குஷ்பூ அப்டேட்..

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் குறித்து, குஷ்பூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக காண்போம்.. நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தளங்களில் சுவடு பதித்து வருபவர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அடுத்ததாக அவர் கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க உள்ளதாக அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கிய […]

நயன்தாரா – தனுஷ் இடையே மோதல்; பின்னணி என்ன?

நட்பாக இருந்த நயன்-தனுஷ் இருவரிடையே தற்போது மோதல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினையின் பின்னணி நிகழ்வுகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.. நயன்தாரா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தனது ஆவணப்படத்திற்காக ‘நானும் ரெளடி தான்’ பட பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டு வந்தோம். அதற்கு அவர் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதால், நாங்கள் அந்த பாடல்கள் இன்றி எனது ஆவணப்படத்தை எடிட் செய்து முடித்துவிட்டோம். […]

ஓவர் ஃபில்டப் கூடவே கூடாது: கார்த்திக் சுப்புராஜிடம் நடிகர் சூர்யா கருத்து

அனுபவம் கற்றுத் தரும் பாடம் தான், அடுத்து நிகழ்வதை சரியாக்கும். இப்ப எதுக்கு இந்த கருத்துன்னா, நடிகர் சூர்யா பெற்ற அனுபவம் தான். வாங்க விஷயத்திற்கு போவோம்.. தமிழ்த்திரையில் முதல் முறையாக பான் இந்திய படமாக உருவானபடம் என்ற பெருமையை கங்குவா பெற்றது. எனவே தமிழ் சினிமாவிற்கே கங்குவா பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது தெரிந்ததே. இப்படத்தின் வசூல் நன்றாக இருந்தாலும், போகப் போக குறைய துவங்கிவிட்டது. அதற்கு இப்படத்தின் மீதான […]