Browsing author

Suresh

ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர்: மோகினி டே போட்ட பதிவு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர் என கூறியுள்ள மோகினி டேயின் பதிவு விவரம் வருமாறு: ரகுமானும், அவர் மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்ததை அடுத்து, பல்வேறு அவதூறு கருத்துகள் வெளியாகின. ரகுமானின் இசைக்குழுவைச் சேர்ந்த பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினி டே, தனது கணவர் மார்க் ஹார்ட்டர்சை பிரிவதாக அறிவித்தார். இதை ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துடன் தொடர்புபடுத்தி, வலைதளத்தில் பதிவுகள் வெளியாகி இருந்தன. ஏற்கனவே இந்த வதந்திகளைக் கண்டித்திருந்தார் மோகினி டே. இந்நிலையில், இது குறித்து […]

திருமணத்துக்காக, மதம் மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் மேனன்- நடிகை மேனகா தம்பதியின் மகள் ஆவார். இவர் ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். குறிப்பாக, ‘மகாநடி’ என்ற சாவித்திரி பயோபிக் படத்தின் சிறந்த நடிப்பிற்காக கீர்த்திக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இயக்குனர் அட்லி தயாரிப்பில் வருண் தவானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ என்ற படத்தில் […]

சோபிதாவுடன் ஓர் அற்புத பயணம்: நாக சைதன்யா மனம் திறந்த பேச்சு..

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின்னே, தற்போது நடிகை சோபிதாவுடன் திருமண வாழ்க்கை நடத்த இருக்கிறார் நாக சைதன்யா. இந்நிலையில், சோபிதா குறித்து, அவர் மனம் திறந்து குறிப்பிட்டதை பார்ப்போம்.. நாகார்ஜூனா-அமலா நட்சத்திர தம்பதியரின் மகன் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான சடங்குகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தனது இரண்டாவது திருமணம் குறித்து கூறியிருப்பதாவது: ‘சோபிதாவுடன் சேர்ந்து புது வாழ்க்கையை துவங்க காத்திருக்கிறேன். அவர், என்னை நன்றாகப் புரிந்து கொள்கிறார். என்னுள் […]

விஜய்யை தொடர்ந்து அஜித்தும் அரசியலுக்கு வருகிறாரா?: நடிகர் ரமேஷ் கண்ணா கருத்து..

‘தல’ அஜித்தும் அரசியலில் குதிக்கிறாரா? என்பது குறித்து, நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்த கருத்து வருமாறு: அன்று.. இயக்குனர் சரண் இயக்கத்தில், அஜித் நடித்த ‘அசல்’ பட சமயத்தில்; அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு.. ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற பெயரில் நிகழ்ச்சியை திரைத்துறையினர் நடத்தினார்கள். அதில், அஜித் கலந்துகொள்ள விரும்பவில்லை. இருந்தாலும் அவர் வற்புறுத்தப்பட்டார். அஜித்தும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருணாநிதியை புகழ்ந்து பேசினார். பிறகு அவர், ‘நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் வேண்டுமென்று மிரட்டுகிறார்கள்’ என கருணாநிதியிடமே […]

நெல்சன் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணியில் இருக்கிறார். முன்னதாக, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் மெகா வெற்றி பெற்றது. இந்நிலையில், படத்தின் 2-ம் பாகம் இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படக்குழுவினர், புரொமோஷன் பணிகளை செய்து […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த மாற்று இசையமைப்பாளர் யார் தெரியுமா?

‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மாற்று இசையமைப்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் சூட் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, எடிட்டிங், ஆர்ஆர் வொர்க் முடிந்து படத்தை 2025-ல் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. […]

என் வருங்கால கணவர் யார் தெரியுமா?: ராஷ்மிகா ஓபன் டாக்..

‘எனது காதலரும் வருங்கால கணவருமானவர் இவர்தான்’ என ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். யார் அவரென அது குறித்துப் பார்ப்போம்.. புஷ்பா பட மெகா ஹிட்டை அடுத்து, அப்படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இப்படம், வருகிற டிசம்பர் 5-ந் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை பான் இந்தியா அளவில் புரமோட் செய்யும் பணியில் படக்குழுவினர் செம பிசியாக உள்ளனர். அவ்வகையில், புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், நாயகன் […]

அட்லி இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியா, கமலா?: பேச்சு வார்த்தை..

ஜவான் பட வெற்றியை தொடர்ந்து, அட்லியின் அடுத்த பட தகவல்கள் குறித்து பார்ப்போம்.. தெறி, மெர்சல், பிகில் என விஜய்யின் மார்க்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்ல அட்லி இயக்கிய படங்களும் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால், பாலிவுட் வரவேற்றது. அங்கு, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ எடுத்தார். ஆயிரம் கோடிக்கு மேல் ஜவான் திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், அடுத்ததாக சல்மான் கானை இயக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இப்படத்தில் சல்மான் கானுக்கு இணையான ஒரு […]

தனுஷ்-சிம்பு பேசியது பற்றி, திரிஷா போட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகிறது..

தனுஷும் சிம்புவும் சிரித்துப் பேசி மகிழ்ந்ததை பார்த்த திரிஷா, அப்டேட்டாக ஒரு பதிவை தட்டியுள்ளார். இது குறித்து பார்ப்போம்.. தனுஷின் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் சென்னையில் நடந்தது தெரிந்ததே. நிகழ்ச்சியில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா என பலர் கலந்து கொண்டனர். தனுஷும், நயன்தாராவும் ஆளுக்கொரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்ட புகைப்படம் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது. மேலும், ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நயன்தாரா, படையப்பா படத்தில் வரும் […]

அப்பாவின் குரலை ஏ.ஐ. செய்ய அனுமதிக்க முடியாது: எஸ்.பி.பி.சரண் உறுதி

சயின்ஸ் டெவலப்மென்ட் சினிமாவில் புகுந்து, செமையாய் கம்பு சுற்றுகிறது. குறிப்பாக ஏ.ஐ. தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மறைந்த பிரபலங்கள் நடித்துள்ளதைப்போல், பாடியுள்ளதைப்போல், பேசியுள்ளதைப்போல் பல படங்களில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ படத்தில் கூட மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பதைப்போல் ‘மனசிலாயோ..’ பாடல் அமைந்திருக்கும். இந்நிலையில், ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வாயிலாக […]