Browsing author

Suresh

ரஜினி நடித்த ‘லால் சலாம்’ படம் ஓடிடி.யில் ரிலீஸாகாமல் டிவி.யில் ஒளிபரப்பாகிறது: முழு விவரம்

சூப்பர் ஸ்டார் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம் டிவி.யில் வெளியாகிறது. இது பற்றிய விவரம் வருமாறு: ரஜினி காந்த் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன ‘லால் சலாம்’ ஓடிடிக்கு வராமலே, டிவி.யில் ரிலீஸாக இருக்கிறது. இது குறித்த தகவல் காண்போம்.. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி… தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படத்தையும் இயக்கினார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு […]

எனக்கு பிடித்த மாதிரி ‘ராஜா சாப்’ படத்தில் பிரபாஸ் உள்ளார்: மாளவிகா மோகனன்

மெகா மாஸ் நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ராஜா சாப்’ படம் குறித்து, மாளவிகா மோகனன் அப்டேட் கொடுத்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. ‘ராஜா சாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு பிரபாஸின் 45-வது பிறந்த நாளில் ரிலீஸ் செய்தது. அதில், “ஹாரர் தான் புதிய நகைச்சுவை” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போஸ்டரில் வயதான கதாபாத்திரத்தில் பிரபாஸ் உள்ளார். கையில் சுருட்டுடன் காணப்படும் அவர், பார்க்கவே மாஸான லுக்கில் உள்ளார். மாருதி இயக்கும் […]

கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதற்காக நிர்வாணக்காட்சியில் நடித்தேன்: நடிகை திவ்ய பிரபா பதிலடி

இந்திய சினிமா வரலாற்றில் கலையின் நுட்பத்தை ரசிப்பவர்கள் மிகக் குறைவு தான். அறிவியலின் வளர்ச்சியில் உணர்வியல் புரிந்து கொள்ளாமலே போய் விடுகிறது. அப்படியொரு நிகழ்வு தான் நடிகை திவ்ய பிரபாவுக்கும். ஆம், இதோ ஓர் நிகழ்வு காண்போம்.. இயக்குநர் பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியான படம் All We Imagine as light. இந்தப் படத்தில் கனி குருஸ்தி, சாயா கதம், திவ்ய பிரபா மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் கேரளாவில் இருந்து […]

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு, இயக்குனர் அட்லி வரவேற்பு..

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்படத்தில், சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, தமன் இசையமைக்கிறார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகின்றது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரி ஒன்றைப் போட்டுள்ளார். அதாவது, முதன் முதலாக படம் இயக்கும் ஜேசனை வரவேற்று, வாழ்த்திப் பதிவிட்டிருக் கிறார். (இருக்காதா பின்னே..) தற்போது, அந்த […]

ரொம்ப சந்தோஷம் அண்ணி: ஜஸ்வர்யாவுக்கு, தனுஷ் ரசிகர்களின் வைரல் பதிவு..

தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர். அது என்ன என பார்ப்போமா.. தனுஷூம், ஐஸ்வர்யாவும் விரும்பியபடியே விவாகரத்து கிடைத்து விட்டது. தனுஷை பிரிவதாக கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்த போதிலும் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வதை ஐஸ்வர்யா நிறுத்தவில்லை. மேலும், தானும் தனுஷும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கவில்லை. இருந்தாலும், இன்ஸ்டாவில் தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கினார். பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்த உடனே இன்ஸ்டாகிராமில் அதிரடி மாற்றம் செய்வார்கள். இந்நிலையில், […]

தமன்னாவை பின் தொடர்கிறார் என் கணவர்: நடிகை ரம்பா சிணுங்கல்..

இணையத்தில் யார் யாரை பின் தொடர்ந்தால் என்ன? தற்போது, இல்லறத்தில் யார் யாரை பின் தொடர்கிறார் என உணர்ந்தால் என்றும் இனிக்கும் நல்லறமே.! அதாவது, நடிகை ரம்பா மேட்டர் இப்டி.. பெயருக்கேற்ப பேரழகி நடிகை ரம்பாவை ரசிகர்களால் மறக்க முடியுமா? நடிப்பிலும், நடனத்திலும் வசீகரித்த நங்கையல்லவா. அவர், இப்போது என்ன செய்கிறார்? சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், தனது தனிப்பட்ட விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘சமூக ஊடகங்களில் தனது கணவரைப் […]

திருமணமே வேணாம், சிங்கிளா வாழுறதே சந்தோஷம்: நடிகை பூனம் பாண்டே சர்ச்சை பேச்சு..

இனி, திருமணம் செய்யாமல் பிடித்தவர்களுடன் வாழ முடிவு செய்திருப்பதாக பூனம் பாண்டே கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: பாலிவுட் நடிகையும் ரியாலிட்டி ஷோ ஸ்டாருமான பூனம் பாண்டே, திருமணம் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாக பொய் விளம்பரம் கொடுத்து ஒரே நாளில் மீடியாக்களையும், ரசிகர்களையும், நட்பு வட்டத்தில் இருந்த பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், அது ஃபேக் டெத் என தெரிய வந்ததும் பலரும் […]

‘தல’ அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’: டீசர் விமர்சனம்..

‘தல’ அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்று ‘விடாமுயற்சி’ டீசர் வெளியாகி, இப்படம் பொங்கல் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.48 செகன்ட்ஸ் ஓடும் டீசர் குறித்து பார்ப்போம். அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ளது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர். இந்த டீசரின் தொடக்கத்தில் அர்ஜுனின் கேங் கார் ஒன்றின் டிக்கியில் இருந்து, ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து, அஜித்தின் இன்ட்ரோ தொடங்கி, திரிஷா என […]

‘சொர்க்கவாசல்’ படம் எப்படி இருக்கு?: ‘பப்ளிக்’ கூறிய கருத்துத் தொகுப்பு..

தமிழ்த்திரையில் காமெடியராய் வந்து, ஹீரோவாக நின்று, இயக்குனராகவும் பயணித்துக் கொண்டிருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கியுள்ள இவர், அடுத்ததாக சூர்யா-45 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. அறிமுக இயக்குனர் சித்தார்த் இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சித்தார்த். படத்தில் சானியா ஐயப்பன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது, ‘சொர்க்கவாசல்’ படம் எப்படி […]

‘அமரன்’ படத்தில் வாழ்ந்த சிவகார்த்திகேயனுக்கு, இராணுவ வீரர்கள் கௌரவிப்பு..

‘ஆயிரம் கோடி பணத்தை விட, ஆகச் சிறந்த புகழொன்றே வரலாறாகும்’. ஆம், அப்படியொரு அரிய நிகழ்வு, அதுவும் சினிமாத் துறையில் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அது குறித்து காண்போம்.. மறைந்தும் மறையாத தமிழக இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்க்கையை மையப்படுத்திய ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருப்பார். இந்தப் படத்தில் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இத்தனை ஆண்டுகால திரைப் பயணத்தில், தற்போது உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக தன்னை […]