Browsing author

Suresh

2-ம் ஆண்டு திருமண நாள்: மாலத்தீவில், நடிகை ஹன்சிகா செம கொண்டாட்டம்..

நடிகை ஹன்சிகாவின் மாலத்தீவு கொண்டாட்டம் தொடர்பாக, ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி தெறிக்கிறது. இது குறித்த தகவல் பார்ப்போம்.. நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கணவர் சோஹைல் கதுரியாவுடன் மிகவும் ரொமாண்டிக்காகக் கொண்டாடினார். மாலத்தீவுக்குச் சென்றுள்ள நடிகை ஹன்சிகா, கடற்கரையில் மகிழ்ந்து, தனது காதலருடன் எடுத்த அழகிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அங்கேயே தனது ஆண்டு விழாவைக் கொண்டாடினார். நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயணத்தின் பல புகைப்படங்கள் மற்றும் […]

நாக சைதன்யா-சோபிதா நட்சத்திர ஜோடி ஹனிமூன்: எங்கே தெரியுமா?

சோபிதா விரும்பிய இடத்திற்கு, நாக சைதன்யா அவருடன் ஹனிமூன் கொண்டாட அழைத்துச் செல்கிறார். இது பற்றிய சமாச்சாரம் பார்ப்போம்.. நடிகர் நாக சைதன்யாவுடன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஜோடியாக நடித்து, சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இவர், தனது முதல் பட ஹீரோவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக, கடந்த 2017-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான கையோடு இருவரும் நியூயார்க் நகரத்துக்கு ஹனிமூனுக்காக சென்றனர். சந்தோஷமாக சமந்தாவும் நாக சைதன்யாவும் வாழ்ந்த […]

தளபதி விஜய்யின் கடைசிப் படம் டைட்டில் அறிவிப்பு.. அப்டேட்: ரசிகர்கள் செம குஷி..

தளபதி விஜய்யின் கடைசிப் படம் தளபதி- 69. இப்படத்தை எச். வினோத் தற்போது இயக்கிக் கொண்டிருக்க, கே.வி.என். புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து, அஜித்துடன் இணைந்து பணியாற்றி வந்த எச். வினோத் தற்போது முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. மேலும், தளபதியின் இறுதிப்படம் என்ற அறிவிப்பினாலும் மாஸ் கூடியிருக்கிறது. இந்நிலையில் ‘தளபதி 69’ குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று […]

‘அமரன்’ பட விவகாரம்: கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் கேட்ட மன்னிப்பு..

அனைவரின் பாராட்டையும் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது ‘அமரன்’ திரைப்படம். தற்போது, இப்படத்தினால் நேர்ந்த பிரச்சினை தொடர்பாக, ராஜ் கமல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் வாழ்ந்திருந்தனர். கமல்ஹாசன் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். தியேட்டரில் படம் மாஸ் ரெஸ்பான்ஸை பெற்றது. குறிப்பாக, ரூபாய் 350 கோடி வரை வசூல் செய்தது. […]

வடிவேலு மீது அவதூறான பேச்சு: சிங்கமுத்துவுக்கு கோர்ட் உத்தரவு..

பல படங்களில் இணைந்து நடித்து, அனைவரையும் சிரிக்க வைத்த இருவர், தற்போது ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு கோர்ட் வரை வந்த விஷயம் வருமாறு: நடிகர் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, சிங்கமுத்து, வடிவேலு குறித்து மோசமாக பேசி வந்தார். சிங்கமுத்து பேசியது மீடியாவில் பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, நடிகர் வடிவேலு, தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக […]

விடாமுயற்சியா, வணங்கானா? முந்தி போகும் திரைப்படம் எது?: கோலிவுட் காத்திருப்பு..

பொங்கல் பண்டிகையில் விடாமுயற்சி, வணங்கான் என்ற இரண்டு படங்களில் முந்தப் போவது எது? என கோலிவுட் வட்டாரம் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி பின்னர், பாதியிலேயே கைவிடப்பட்ட திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தை மீண்டும் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்கி முடித்துள்ளார். இப்படம், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரோடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. ரோஷினி பிரகாஷ், ரித்தா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில், சமுத்திரக்கனி, மிஷ்கின், […]

‘ப்ளீஸ்.. லிஸ்ட் டெல்க’ : திரிஷாவின் வருத்தம் புரிந்து, ரசிகர்கள் அன்புக் கோரிக்கை..

‘எனக்கு ஒரு நாள் விடுமுறை வருகிறது என்றால், நான் யார்கிட்டேயும் அதை சொல்லவே மாட்டேன்’ என கூறியிருக்கிறார் ‘என்றும் டீன்ஏஜ் குயின்’ திரிஷா. இது குறித்த சமாச்சாரம் பார்ப்போம்.. பொதுவாக, சினிமாவில் 30 வயதை தொட்டுவிட்டால் ஹீரோயினாக நிலைப்பது கடினம் என சொல்வார்கள். ஆனால், 41 வயதில் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார் த்ரிஷா. அஜித், விஜய், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அதிலும் அஜித்துடன் இரண்டு படங்களில் நடிக்கிறார். திரிஷாவின் […]

(ரஜினி) அண்ணனின் பிறந்த நாளில், (கீர்த்தி சுரேஷ்) தங்கச்சிக்கு திருமணம்: அழைப்பிதழ் விவரம்..

‘காதல் வந்ததும் கன்னியின் உள்ளம், காதலை யாருக்கும் சொல்வதில்லை..’ என்ற பாட்டு வரிகளுக்கு ஏற்ப சமீபத்தில் தான் திருவாய் மலர்ந்து அனைவருக்கும் தனது காதலை தெரியப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது, கீர்த்தியின் இத்தகைய காதல் பயணம், திருமண பத்திரிகை வரை வந்து வைரலாகி தெறிக்கிறது. இது குறித்து வாசிப்போம்.. கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் குடும்பத்தினர் திருமணத்திற்கான பணிகளில் பரபரப்பாக இறங்கி உள்ளனர். தீவிரமாக திருமண பத்திரிக்கை விநியோகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், […]

இந்த வாரம், ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள் லிஸ்ட்..

வீட்டுக்குள் ஒரு மினி தியேட்டர் என்றால் அது ஓடிடி தான். இதில், சுதந்திரமாக படம் காண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள் இதோ.. அமரன்: இந்தாண்டு தீபாவளி ரிலீசாக வெளியானது ‘அமரன்’. சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது. மறைந்த மேஜர் முகுந்தாக எஸ்கேவும், இந்து ரெபக்கா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்த இப்படத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என […]

நாக சைதன்யா-சோபிதாவுக்கு நடந்த திருமணம்: மகிழ்வான நிகழ்வுகள்..

சமந்தாவுடன் நிகழ்ந்த பிரிவுக்கு பிறகு, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரது காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்து, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ‘இனி, சோபிதாவுடன் ஓர் அற்புத வாழ்க்கை தொடரும்’ என நாகா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில், அறிவித்தபடி நேற்று ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமணம் நடந்தது. இதில், இருவீட்டாரும் உறவினர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். பொதுவாக திருமணம் காலையில் நடக்கும். ஆனால், இவர்களது திருமணமோ நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்றது. நாகேஸ்வர […]