Browsing author

Suresh

எனக்கு திருமணம் ஆகிவிட்டது: நடிகை டாப்ஸி ஓபன் டாக்

‘வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தாங்களா? வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா?’ என்ற ‘ஆடுகளம்’ படத்தில் வரும் வரிகளுக்கு பொருத்தமானவர்தான் நடிகை டாப்ஸி. இவர் திடீரென தற்போது, ‘எனக்கு கடந்த ஆண்டே திருமணம் ஆகிவிட்டது’ என கூறியுள்ளார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. நடிகை டாப்ஸி தனது தனிப்பட்ட வாழ்க்கை, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் சொல்லமாட்டார். பொதுஇடங்களில் புகைப்படங்களுக்கும் போஸ் கொடுப்பதில்லை. இத்தகைய கொள்கையோடு இவர், தனது காதலர் மத்யாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்து […]

‘தபேலா மேதை-பத்ம விபூஷண்’ ஜாகிர் உசேன் மறைவு: வரலாற்றுச் சுவடுகள் சில!

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் காண்போம்.. ‘தபேலா மேதை’ ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். ஜாகிர் உசேன் மறைவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘ஜாகிர் உசேன் 2 வாரங்களாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் தீவிர […]

கடைசி நாள் ஷூட்டிங்கில், செம ஸ்டைலிஷ் லுக்கில் ‘தல அஜித்: ரசிகர்கள் உற்சாகம்..

‘தல’ அஜித் குறித்த மாஸ் அப்டேட் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லீ’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வந்த அஜித், ஏற்கனவே ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை முடித்து டப்பிங் பணியையும் நிறைவு செய்த நிலையில், தற்போது ‘குட் […]

நடிகர் சூரி இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்: படத்தின் ‘கதை’ பற்றிய விவரம்..

இயக்குனராக களம் காண இருக்கிறார் சூரி. அவர் இயக்கவிருக்கும் படத்தின் கதை குறித்த விவரம் காண்போம்.. திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானார் சூரி. இதனைத் தொடர்ந்து, கொட்டுக்காலி, கருடன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின. இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து முடித்துள்ள விடுதலை-2 படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் சூரி நடிக்க, விஜய் சேதுபதி […]

சீக்கிரம் வாங்க சார்: கமல்ஹாசனுக்கு, ரசிகர்கள் கோரிக்கை..

‘விண்வெளி நாயகன்’ கமல்ஹாசனுக்கு, ரசிகர்கள் விடுத்துள்ள கோரி்க்கை பற்றி பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல். கமலுடன் இணைந்து சிம்புவும் நடித்துள்ளார். ‘நாயகன்’ படத்திற்கு பிறகு, 38 வருடங்கள் கழித்து மீண்டும் கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து, அமெரிக்கா சென்ற கமல், அங்கு ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பற்றிப் படிப்பதாக தகவல்கள் வருகின்றன. அதனால், பிக் பாஸ் […]

திருமணத்திற்கு பிறகும், கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிப்பாரா?

தனது காதலரை மணந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா என்பது குறித்து காண்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். ஆண்டனி கிறிஸ்தவர் என்பதால், கோவாவில் உள்ள பிரபலமான சர்ச்சில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால், கிறிஸ்துவ மதத்தில் திருமணம் நடைபெற்றது போன்ற, எந்த ஒரு புகைப்படமும் இணையத்தில் வெளியாகவில்லை. கிறிஸ்தவரான ஆண்டனி, நெற்றியிலே நாமம் போட்டுக் கொண்டு ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர் […]

ஜெயம் ரவியை நெகிழச் செய்த சிவகார்த்திகேயன்: எப்படி தெரியுமா?

‘நிலை உயரும்போது, பணிவு வந்தால் உலகம் உன்னை வணங்கும்’ என்ற கண்ணதாசன் பாட்டு வரிபோல, SK25 பட பூஜையில் நிகழ்ந்ததை காண்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. சூர்யா நடிப்பதாக இருந்த இப்படத்தில் சிவகார்த்தி நடிக்கிறார். மேலும், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது, ரசிகர்களை எதிர்ப்பார்க்க வைத்துள்ளது. ஹீரோவாக நடித்து வரும் ஜெயம் ரவி மற்றொரு ஹீரோவின் படத்தில் நடிக்கின்றார் என்றால், கண்டிப்பாக […]

சிங்கப்பூரில், சிம்புவின் ரசிகைக்கு கிட்டியது அதிர்ஷ்டம்: என்ன தெரியுமா?

அதிர்ஷ்டம் என்பது என்ன? அது இஷ்டம், நம்ம இஷ்டமல்ல.! அவ்வகையில், சிம்புவின் ரசிகைக்கு கிட்டிய அதிர்ஷ்டம் என்ன என பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். அதேபோல், சிம்பு தான் நடிக்க கமிட் ஆகியுள்ள படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸானது. இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகின்றார். இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிங்கப்பூரில் நடத்திய இசைக் கச்சேரியில் கலந்துகொண்டு பாடப்போகின்றார் […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ ஷூட்டிங் ஸ்டார்ட்: சுதாவிடம் ரசிகர்கள் கேட்கும் கேள்வி..

சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இது குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதனையடுத்து, சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இருவரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதில், சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று சனிக்கிழமை முதல், சென்னையில் தொடங்கியிருக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா […]

கருணையோடும் அன்போடும் பாருங்கள்: மிஷ்கின் ஸ்பீச்சுக்கு, நெட்டிசன்ஸ் கமென்ட்ஸ்..

இயக்குனர் மிஷ்கினின் பேரன்பு பேச்சும், அதற்கு இணையவாசிகள் தெரிவித்துள்ள கருத்தும் காண்போம்… எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இத்திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், ‘சமீபத்தில் ஒரு பெரிய படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். படம் நன்றாக இல்லை என்றால் ரசிகர்கள் கோபமடைகிறார்கள். […]