Browsing author

Suresh

கண்டிப்பாக 100% ரஜினி சார் படத்தை இயக்குவேன்: அட்லீ நம்பிக்கை

ரஜினி சார் நடிக்கும் படத்தை இயக்குவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார் அட்லீ. இது பற்றிய விவரம் காண்போம்.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான இளம் இயக்குனர் அட்லீ. தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில் அட்லீ கூறியதாவது, ‘நான் […]

நயன்தாரா ஆவணப்பட விவகாரம்: தனுஷிற்கு எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நடிகர் தனுஷிற்கு எதிராக, நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது பற்றி நிகழ்ந்த வாதம் வருமாறு: நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் தொடர்பான தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் பிலிம்ஸ் தாக்கல் செய்த பதிப்புரிமை மீறல் வழக்கை தள்ளுபடி செய்ய நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கை வருகிற பிப்ரவரி 5-ந் தேதி பட்டியலிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2015 […]

விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாட் முத்தக்காட்சி ‘கட்’ ஆனது

அன்று ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி கவனிக்கப்படாத பூஜா ஹெக்டே, தற்போது முன்னணி நடிகையாகி உள்ளார். கவர்ச்சியில் கஞ்சத்தனம் இல்லாத தாராளமயமான அவரது அப்டேட்ஸ் பார்ப்போம்.. தளபதியின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்கும் ‘தேவா’ படத்திலும் ஜோடியாகி உள்ளார். இந்த படம் வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஷாகித் கபூருடன், பூஜா ஹெக்டே செம ஹாட்டாக நெருங்கிய காட்சியை சென்சார் போர்டு “கட்” செய்துள்ளது. […]

பார்ட்டியில் மகிழ்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-விஜய் சேதுபதி: ரசிகர்கள் கருத்து..

படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விஜய் சேதுபதியும் கலந்துகொண்ட நிகழ்வு குறித்துப் பார்க்கலாம்.. தெலுங்கு சினிமாவில் வெங்கடேஷ் நடித்து, அனில் ரவுபுடி இயக்கிய ‘சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தில் ஜோடியானார் ஐஸ்வர்யா ராஜேஷ். செம காமெடியான இந்தப் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.300 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘கேம் சேஞ்சர்’ […]

ரவிமோகன் நடிக்கும் படத்திலிருந்து ஹாரீஸ் ஜெயராஜ் விலகல்: அவருக்கு பதில் இவர்?

ரவிமோகன் படத்தில் ஹாரீஸ்க்கு பதில் வேறு இசையமைப்பாளர் கமிட்டாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ஜெயம் ரவிக்கு கடந்த ஆண்டு வெளிவந்த சைரன், பிரதர் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இத்துடன் விவாகரத்து நிலை வேறு. இதையடுத்து, பெயரை மாற்றினார். பின் அவருக்கு இந்த ஆண்டு முதல் படமே சென்டிமென்டாக வெற்றி கிடைத்தது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அவர் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘ஜீனி’ படமும் […]

புஷ்பா-2 படம், எக்ஸ்ட்ரா 20 நிமிட காட்சிகளுடன் ஓடிடி.யில் ரிலீஸ்; முழு விவரம்..

சுகுமார் இயக்கிய ‘புஷ்பா-2’ ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல் காண்போம்.. அல்லு-ராஷ்மி அலப்பறையில் ‘புஷ்பா- 2’ திரைப்படம், முதல் நாளில், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 294 கோடியை வசூலித்து, சாதனை படைத்தது. பின்னர், படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் மெகா சாதனை படைத்த நிலையில்,11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா தி ரூல் படம், ரூ. 1300 கோடி […]

விஜய் சேதுபதி நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது; விவரம்..

விஜய் சேதுபதி நடித்த 3 படங்கள் நடப்பு ஆண்டிலேயே ரிலீஸாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்த விவரம் காண்போம்.. தமிழ் சினிமாவில் தனித்துவம் பெற்ற முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படத்திலும் பிஸியாகி வருகிறார். தற்போது விஜய் சேதுபதி, கலைப்புலி எஸ்.தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை […]

‘வீடியோ உலகம் இதனை கவனிக்கவும்’ என விஷால் செய்த குறும்பு

மதகஜராஜா கொடுத்த மகிழ்ச்சியில், விஷால் வழங்கிய குறும்புச் செயல் குறித்துப் பார்க்கலாம் வாங்க.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸாகி, பரவலாக கொண்டாடப்பட்டு உள்ளது தெரிந்ததே. ரிலீஸாகி 15 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில், இப்படம் 50 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மீண்டும் விஷாலும், சுந்தர்.சியும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக விஷால் கை நடுக்கத்துடன் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். […]

சிம்புவும் திரிஷாவும் பரிசீலனை செய்ய வேண்டும்: ரசிகர்கள் அன்புக் கோரிக்கை

காதலிப்பவர் எல்லாம் கல்யாணம் முடிப்பதில்லை. கல்யாணம் முடித்தவர் எல்லாம் காதலிப்பதில்லை. அதாவது விஷயம் என்னன்னா.. ராணா-திரிஷா இருவருக்கும் இடையே நிகழ்ந்த காதல் கல்யாணம் வரை போகவில்லை. அந்நிலையில், ராணாவுக்கு மஹிகா பஜாஜ் மீது காதல் வந்து இருவருக்கும் கல்யாண வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது. இச்சூழலில், திரிஷா பற்றி தற்போது ராணா கூறியதாவது, ’10 ஆண்டுகளுக்கும் மேலாக திரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் […]

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ எப்போது ரிலீஸ்?

கோடைவெயிலில் துருவ நட்சத்திரம் பார்க்கலாம் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக அப்படம் 8 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடைக்கிறது. தற்போது அப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை இயக்குனர் கெளதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். அவ்வகையில், ‘துருவ நட்சத்திரம்’ படம் […]